“செப்.26 -அக்.2 வரை சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி” – அமைச்சர் தகவல்

சர்வதேச உலக மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற இருப்பதாகவும், அதற்காக முதற்கட்டமாக 5கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை நுங்கம்பாக்கம் மைதானத்தில் சர்வதேச உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடைபெற இருப்பதாகக் கூறினார்.

சென்னையில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி- தமிழக அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு  || Tamil News World Womens Tennis Tournament in Chennai TN Government  allocates Rs 5 crore

நுங்கம்பாக்கம் மைதானத்தை பராமரிப்பதில் தொடங்கி போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருவதாகக் கூறிய அமைச்சர் மெய்யநாதன், செஸ் ஒலிம்பியாட் தொடருக்காக தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாகவும் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சியால் தான் அடுத்த ஆண்டு பீச் வாலிபால் தொடர் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM