தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வணிகக்கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில் 27 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமும் அறிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 3 அடுக்குகள் கொண்ட வணிகக் கட்டடம் உள்ளது, அங்கு நேற்று மாலை திடீரென தீப்பற்றியது. அடுத்தடுத்து 3 மாடிகளுக்கும் நெருப்பு பரவி புகை மண்டலம் சூழ்ந்ததில், உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்தனர். சிலர் கட்டடத்தில் இருந்து குதித்து உயிர்தப்பிக்க முயன்றனர். தகவலறிந்து 24 வாகனங்களில் விரைந்த தீயணைப்புப் படையினர், தீயை கட்டுப்படுத்த போராடினர். உள்ளே இருந்தவர்களை மீட்கவும் தீவிரமாக செயல்பட்டனர். எனினும் 27 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். 50 க்கும் அதிகமானோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

27 killed in massive fire in four-storeyed commercial building in Delhi

மீட்புப்பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் இணைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயமுற்றோருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.