கிழக்கு உக்ரைன் நகரமான மரியுபோலில் முற்றுகையிடப்பட்ட அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் ரஷ்ய ஆயுதப் படைகளுக்கு எதிராக தங்கள் சண்டையைத் தொடர்வதாக உக்ரைன் ராணுவ வீரர்கள் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஒரு ஆன்லைன் செய்தி மாநாட்டில் பேசிய உக்ரைனின் அசோவ் படைப்பிரிவை சேர்ந்த இல்லியா சமோலென்கோ, “சரணடைவது என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ரஷ்யர்களிடம் சரணடைந்தால் நாங்கள்  உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் பூஜ்ஜியமாக இருக்கும். இந்த ஆலைக்குள் இன்னும் டஜன் கணக்கான பொதுமக்கள் உள்ளனர். ரஷ்யப் படைகளின் பிடியில் இருக்கும் ஆலையில் இருந்து காயமடைந்த வீரர்களை வெளியேற்ற உதவுமாறு சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுக்கிறோம்” எனத் தெரிவித்தார்

Women and Children Evacuated Out of Mariupol's Azovstal Steel Plant - The  New York Times

நேற்று முன்தினம் ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ் பேசுகையில், மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான ரஷ்யாவின் மனிதாபிமான நடவடிக்கைகளின் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகளின் தீவிர பங்கேற்புடன் 11 குழந்தைகள் உட்பட 51 (18 ஆண்கள், 22 பெண்கள் மற்றும் 11 குழந்தைகள்) பேர் மீட்கப்பட்டதாகக் கூறினார்,

மார்ச் 7 அன்று, டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் படைகள் மரியுபோலைச் சுற்றி வளைத்து தங்கள் போரினை தொடங்கினர். அதனைத் தொடர்ந்து மரியுபோல் நகரை கைப்பற்றிவிட்டதாக ஏப்ரல் 21 ஆம் தேதி ரஷ்ய அதிபர் புடின் அறிவித்தார். இருந்தாலும், அந்த நகரில் உள்ள  அசோவ்ஸ்டல் எஃகு ஆலையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் பதுங்கி உள்ளனர், பொதுமக்களும் அங்கு உள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஆனால் உக்ரைன் வீரர்கள் பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதாக ரஷ்யா குற்றம் சாட்டி வருகிறது.

image

கடந்த பிப்ரவரி 24 அன்று உக்ரைனில் ரஷ்யா ஒரு “சிறப்பு ராணுவ நடவடிக்கையை” தொடங்கியது. இதன் விளைவாக, பல மேற்கத்திய நாடுகளும் ரஷ்யா மீது பல முடக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இதையும் படிக்க: கிழக்கு உக்ரைன் பள்ளியில் நடந்த தாக்குதலில் 60 பேர் பலி? – லுகான்ஸ்க் ஆளுநர் அச்சம் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.