ஐ.பி.எல். கிரிக்கெட்டில் குஜராத் – மும்பை அணிகள் இன்று மோதுகின்றன.

15வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றுடன் 50 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இந்நிலையில் மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும்  51-வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

image

இந்த தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள புதுமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் கம்பீரமாக பயணிக்கிறது. ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ள குஜராத் அணி இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட அந்த வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துவிடும்.

பேட்டிங்கில் ஹர்திக் பாண்டிட்யா (309 ரன்கள்), டேவிட் மில்லர் (287 ரன்கள்), சுப்மான் கில் (269 ரன்கள்) ராகுல் திவேதியா, விருத்திமான் சஹா ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது ஷமி (15 விக்கெட்), லோக்கி பெர்குசன் (11 விக்கெட்), ரஷித் கான் ஆகியோர் அசத்தி  வருகிறார்கள்.

image

மறுபுறம், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் படுமோசமாக சொதப்பி வருகிறது. தொடர்ந்து 8 தோல்விகளை பெற்றுவிட்ட பின்னர்தான் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. மும்பை அணி மொத்தமாக 9 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளை மட்டும் தான் பெற்றுள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற குறைந்தபட்சம் 16 புள்ளிகளை பெற வேண்டும். அந்த வகையில் மும்பை அணி ஏற்கனவே ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டு விட்டது. இருப்பினும், அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஆறுதல் வெற்றிகளை பெற்று, அடுத்த சீசனுக்காக வலுவான அணியை தயார்படுத்த வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.

பேட்டிங்கில் திலக் வர்மா  (307 ரன்கள்),  சூர்யகுமார் யாதவ் (290 ரன்கள்), இஷான் கிஷன் (225 ரன்கள்) நம்பிக்கையளிக்கின்றனர். ரோகித் சர்மா, பொல்லார்ட் உள்ளிட்டோர் தொடர்ந்து ஏமாற்றுகின்றனர். அந்த அணியில் பவுலிங் தான் பெரும் பிரச்சினையாக உள்ளது. இன்றைய ஆட்டத்திலாவது பந்துவீச்சு புத்துயிர் பெறுமா எனப் பார்க்கலாம். மும்பை அணியின் வேகப்பந்துவீச்சாளர் டைமல் மில்ஸ் காயம் காரணமாக இந்த  ஐபிஎல் தொடரில் இனி வரும் போட்டிகளில் இருந்து  விலகியுள்ளார். அவருக்கு பதிலாக  தென் அப்பரிக்கவை சேர்ந்த  டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மாற்று வீரராக அணியில் இணைந்துள்ளார்.

image

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

குஜராத் டைட்டன்ஸ்: 1.ஷுப்மான் கில், 2.விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), 3. சாய் சுதர்சன், 4.ஹர்திக் பாண்டியா (கேப்டன்), 5.டேவிட் மில்லர், 6.ராகுல் தெவாடியா, 7.ரஷித் கான், 8.அல்சாரி ஜோசப், 9.லாக்கி பெர்குசன், 10.முகமது ஷமி. 11.பிரதீப் சங்வான்/யாஷ் தயாள்

மும்பை இந்தியன்ஸ்: 1.ரோகித் சர்மா (கேப்டன்), 2 இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), 3.சூர்யகுமார் யாதவ், 4.திலக் வர்மா, 5.பொல்லார்ட், 6.டிம் டேவிட், 7.டேனியல் சாம்ஸ், 8.ஹிருத்திக் ஷோக்கீன், 9.ஜஸ்பிரித் பும்ரா, 10.குமார் கார்த்திகேயா, 11.ரிலே மெரிடித்/டிரிஸ்டன் ஸ்டப்ஸ்

இதையும் படிக்கலாம்: 207 ரன்கள் குவித்த டெல்லி – 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய ஐதராபாத்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.