தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி நெருங்கிக்கொண்டிருக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், தேர்வெழுத நினைப்பவர்கள் விரைந்து விண்ணப்பித்துவிடவும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி கீழ், தமிழ்நாடு அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படும் வழக்கம்தான் இன்றளவும் உள்ளது. அப்படியான ஒரு தேர்வுதான் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு. கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பிறகு, குரூப் 4 தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகாமலயே இருந்து வந்தது. கடந்த மார்ச் 29ம் தேதிதான் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

image

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்திக்கையில், `டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறும்’ என்று தெரிவித்தார். இதற்காக மார்ச் 30 முதல், ஏப்ரல் 28-ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறினார்.

மொத்தம் 7,382 பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்தத் தேர்வில், 81 பணியிடங்கள் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் நிரப்பப்படுகின்றன. 7301 பணியிடங்களுக்கு போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஜூலை 24-ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 200 கேள்விகள், 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்பட உள்ளது. அக்டோபர் மாதம் முடிவுகளை வெளியிட டிஎன்பிஸ்சி முடிவு செய்துள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பிக்க நினைப்போர், இந்த லிங்க் (https://www.tnpsc.gov.in/English/Notification.aspx)-ல் செல்லவும்.

சமீபத்திய செய்தி: ஐபிஎல்: கே.எல்.ராகுலுக்கு ரூ.24 லட்சம் அபராதம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.