இலங்கையில் ராஜபக்ச அரசு பதவி விலக வலியுறுத்தி, காவல்துறையினரின் தடைகளைத் தாண்டி பல்கலைக்கழக மாணவர்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வீட்டை முற்றுகையிட்டனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ராஜபக்ச அரசு பதவி விலகக்கோரி போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. தலைநகர் கொழும்புவில் அதிபர் அலுவலகத்தை நோக்கிச் சென்ற பல்கலைக்கழக மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் தடைகளை மீறி பிரதமர் வீட்டு முன்பு கூடிய மாணவர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து பேரணியாக சென்ற மாணவர்கள், அதிபர் அலுவலகம் எதிரே உள்ள காலிமுகத்திடலில் கூடி, இரவில் செல்போன் டார்ச் விளக்குகளை ஒளிரச் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

image

போராட்டக் களத்தில் பல்வேறு முகாம்கள் அமைக்கப்பட்டு, உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இலவச சட்ட உதவி அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது பலரின் கவனத்தை பெற்றுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஏதேனும் சட்ட ரீதியிலான சிக்கல் ஏற்பட்டால் அவர்களுக்கு இம்முகாமிலேயே உதவிகள் செய்யப்படுகின்றன. அரசுக்கு எதிரான போராட்டம் மக்கள் கிளர்ச்சியாக வெடித்து தீவிரம் அடைந்து வருவதால், இலங்கையில் பதற்றமான சூழலே நிலவுகிறது.

இதையும் படிக்கலாம்: ‘நான் பதவி விலகப்போவதில்லை; மக்கள் போராட வேண்டியதுதான்’- மகிந்த ராஜபக்ச

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.