உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளுடன் சிவசங்கர் பாபாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் எழுந்த நிலையில், புகாரை விசாரித்த சிபிசிஐடி போலீசார் அவர் மீது 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்தனர். பிறகு அந்த வழக்கில் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் சிவசங்கர் பாபா தரப்பில் தாக்கல் செய்யபட்ட இரண்டு ஜாமீன் மனுக்கள் கீழமை நீதிமன்றத்தால தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் மேலும் ஓரு வழக்கில் சிவசங்கர் பாபா உடல்நிலையை காரணம் காட்டி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கூறி மனு தாக்கல் செய்தார்.

image

ஆனால், ஜாமீன் வழங்கினால் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் புகார் தாரர்களுக்கும் ஆபத்து நேரிடும் எனவும், மேலும் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜாமீன் வழங்கக்கூடாது என தமிழக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனையேற்று தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், தனக்கு ஜாமீன் கோரியும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். அங்கு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. 

image

இந்நிலையில், இன்று சிவசங்கர் பாபாவின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முதலில் பதிவு செய்த வழக்கில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதுவரை 7 வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ளேன். மேலும் புகார் அளித்த பெண் 2014-15ல் படிப்பை முடித்தாலும், 2021 தொடக்கம் வரை மின்னஞ்சல் மூலம் பேசிக்கொண்டுதான் இருந்தார். பின்னர் திடீரென புகார் அளித்திருக்கிறார். மதிப்புமிக்க ஆசிரியர்கள் மீது மாணவி நம்பமுடியாத அளவிற்கு புகார்களை கூறியுள்ளார். ஆசிரியர்கள் அனைவரும் திருமணமாகி குடும்பத்தினருடன் உள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்லும் இடத்தில் முறைகேடாக நடக்க வாய்ப்பே இல்லை என சிவசங்கர் பாபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

image

காவல்துறையிடம், 8 வழக்கில் ஒரு வழக்கில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல். மற்ற வழக்குகளில் விசாரணையை முடிக்க முடியவில்லையா? என்றும், பள்ளியிலிருந்து வெளியேறிய பிறகும் மாணவி ஆசிரமம் வந்து சென்றுள்ளதாக மனுதாரர் கூறுகிறாரே. ஏன்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு காவல்துறை தரப்பில், அவர் ஆதாரங்கள் கலைப்பார்; சாட்சிகளை மிரட்டுவார்’ பின்னர் மாயமாகிவிடுவார். எனவே ஜாமீன் வழங்கக் கூடாது எனவும், அனைத்து வழக்குகளிலும் விரைவில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யவுள்ளோம் எனவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவிகளை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

image

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், பாஸ்போர்ட்டை தாக்கல் செய்யவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் கூடுதல் நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கினார். மேலும், விசாரணை அதிகாரிக்கு தெரிவிக்காமல் தமிழகத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது எனவும் கூறியுள்ளார். ஏற்கெனவே 7 வழக்குகளில் செங்கல்பட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார் சிவசங்கர் பாபா.  எனவே விரைவில் சிறையிலிருந்து வெளியே வரவுள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.