4 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பிறகு இன்று தொடங்கிய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமாகின்றன.

இன்று காலை 10 மணி வாக்கில் மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் ஆயிரத்து 19 புள்ளிகள் சரிந்து 57 ஆயிரத்து 319 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசியப் பங்குச் சந்தையின் நிஃப்டி 265 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 17 ஆயிரத்து 210 புள்ளிகளில் வணிகமாகியது.

D-Street stares at a flat start; Nifty support, stocks under F&O ban, key  things to know before today's trade | The Financial Express

இன்றைய வர்த்தகத்தில், இன்ஃபோசிஸ், டெக் மகிந்தரா, டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் இறக்கத்துடன் வர்த்தகமாகின்றன. ஆசியப் பங்குச் சந்தைகளில் காணப்படும் சரிவின் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியுடன் வர்த்தகமாவதாக கூறப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 24 காசுகள் குறைந்து 76 ரூபாய் 43 காசுகளில் வர்த்தகமாகிறது. சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் ஒரு சதவிகிதம் உயர்ந்து சுமார் 113 டாலரில் வணிகமாகியது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.