கனடாவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கல்லூரி மாணவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் டோரோன்டோ நகரில் தங்கி அங்குள்ள செனக்கா கல்லூரியில் பயின்று வந்தவர் கார்த்திக் வாசுதேவ் (21). இவர் கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதிநேரமாக ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

image

இந்நிலையில், வழக்கம் போல நேற்று மாலை அவர் பணிக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கிருந்த சுரங்கப் பாதை வழியாக சென்ற போது, எதிரே வந்த மர்மநபர் ஒருவர் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் வாசுதேவ் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து டோரோன்டோ போலீஸார் கூறுகையில், “வாசுதேவை துப்பாக்கியால் சுட்டது ஒரு கறுப்பினத்தை சேர்ந்த இளைஞர் என்பது மட்டுமே இப்போதைக்கு தெரியவந்துள்ளது. சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம. விரைவில் குற்றவாளியை கைது செய்வோம்” என்றனர்.

இதனிடையே, இச்சம்பவத்துக்கு கனடா தூதரகம் இரங்கலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “கார்த்திக் வாசுதேவ் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளோம். இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். விரைவில் அவரது உடலை குடும்பத்தினரிடம் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

அதேபோல, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட கார்த்திக் வாசுதேவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.