நடப்பு ஐபிஎல் சீசனின் 7-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இரு அணிகளும் இந்த சீசனின் முதல் போட்டியில் தோல்வியை தழுவியிருந்தன. அதனால் இந்த போட்டியில் வெற்றியை ருசித்து விட கடுமையாக முயற்சி செய்யும்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், தங்கள் அணி முதலில் பவுலிங் செய்ய உள்ளதாக அறிவித்தார். சென்னை அணி முதலில் இந்த போட்டியில் பேட் செய்கிறது.
ஆடும் லெவன் விவரம்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
கே.எல்.ராகுல் (கேப்டன்), டிகாக் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, குர்ணால் பாண்ட்யா, துஷ்மந்த் சமீரா, ஆண்ட்ரூ டை, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.
சென்னை சூப்பர் கிங்ஸ்!
ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), எம்.எஸ்.தோனி(விக்கெட் கீப்பர்), ஷிவம் தூபே, டுவைன் பிராவோ, டுவைன் பிரிட்டோரியஸ், முகேஷ் சவுத்ரி, துஷார் தேஷ்பாண்டே.