சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 9 நாட்களில் லிட்டருக்கு 5 ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி, பெட்ரோல் ஒரு லிட்டர் 75 காசுகள் விலை உயர்ந்து 106 ரூபாய் 69 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 76 காசுகள் அதிகரித்து 96 ரூபாய் 76 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 9 நாட்களில் 8 முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் 29 காசுகளும், டீசல் லிட்டருக்கு 5 ரூபாய் 33 காசுகளும் விலை அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 108.77 டாலரில் வர்த்தகமாகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையே போரை நிறுத்துவது குறித்து நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்பட்டது, சீனாவில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது போன்ற காரணங்களால் நேற்று மாலை பிரென்ட் கச்சா ஒரு பீப்பாய் 103 டாலர் வரை குறைந்து தற்போது அதிகரித்துள்ளது.

Petrol, diesel prices today in Hyderabad, Delhi, Chennai, Mumbai hiked on  24 June 2021

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 130 டாலர் என்ற நிலையிலிருந்து படிப்படியாக குறைந்து வரும் நிலையிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் பெரும் சிரமத்தை சந்திப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.