தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மார்ச் 22-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு… விலை ஏற்றம் தொடருமா? முற்றுப்புள்ளி வருமா?‘ எனக் கேட்டிருந்தோம்.
image

வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
முற்றுபுள்ளி எல்லாம் வராது. இலங்கை மாதிரி இந்தியா மாறும். அப்போ மக்கள் வச்சு செய்வாங்க. அதுவரை விலை உயர்வு தொடரட்டும். மேக்கப் போட்டு டிரஸ் உடுத்தி சீவி சிங்காரிக்கிற நவீன நீரோ மன்னனின் கார்ப்பரேட் தொண்டு சிறக்கட்டும்.

Nellai D Muthuselvam

உக்ரேன் போருக்கு முற்றுபுள்ளி வந்தால் விலை ஏற்றத்திற்கு முற்றுபுள்ளி வரும்.

அரசர் அய்யா

எந்த விலைவாசிக்காவது இதுவரை முற்றுப்புள்ளி விழுந்ததுண்டா? தொடரும்.. தொடரும்.. தொட்டுத் தொடரும் பகீர் பாரம்பரியம் இது!

விலையேற்றத்தால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
image
இலவசங்கள் (நகை கடன், பஸ் டிக்கெட் மற்றும் இதர) குறைத்தால் பொருட்கள் விலை குறையும். இலவசங்களை அதிகரித்தால் பொருள்கள் விலையும் அதிகரிக்கும்.

T SK

அதிகப்படியான விலை உயர்வை காரணம் காட்டி ஆட்சிக்கு வந்த பாஜக, லாவகமாக நிறுவனங்களுக்கே விலையை உயர்த்தி கொள்ளும் உரிமையை கொடுத்து விட்டு, இப்போது அதிக வரியை மக்கள் மீது சுமத்தி, வரலாற்றில் அதிகப்படியான வரியையும் அதற்கேற்ற விலையையும் வாங்கி கொண்டு சாதாரண மக்களின் உழைப்பை சுரண்டி பிற அரசு செலவுகளுக்கு பயன்படுத்துகின்றனர். இது மக்கள் மீது சுமத்தப்பட்ட வரியினால் ஆன பொருளாதார போர். வாரம் 2000 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வாறு இந்த விலை உயர்வை சமாளித்து வாழ முடியும்?
DMK அரசு, மக்களிடம் இருந்து ஆட்டைய போட்ட பணத்தில் இருந்து விலை உயர்வை கழித்து கொள்ளுமாறு, ஏமாந்த பொது மக்களாகிய நாம் கேட்டு கொள்கிறோம்.
இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூகவலைதள பக்கங்களில் பகிரப்படும்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.