மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட்டின் செயல், மைதானத்தில் சிரிப்பலையை உருவாக்கியுள்ளது.

மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதையடுத்து நேற்று முன்தினம் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்டு மைதானத்தில் துவங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்க ரன்களிலும், சொற்ப ரன்களிலும் ஆட்டமிழந்து தடுமாறினர். பின்னர், களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவின் ஆட்டத்தால் அந்த அணி மளமளவென ரன்களை குவிக்க துவங்கியது.

image

இதனால் அந்த அணியின் ஸ்கோர் உயர்ந்தது. பின்னர் 311 ரன்களுக்கு இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 142 ரன்களும், விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை எடுத்துள்ளது.

இந்நிலையில், 2-ம் நாள் ஆட்டத்தின்போது, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் பந்து வீசிவிட்டு மைதானத்தின் எதிர்திசையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தனது அணி வீரர்களை ஆலோசனைக்கு அழைத்தார். இதனை மார்க் வுட் கவனிக்கவில்லை. 9 வீரர்கள் மட்டும், ஜோ ரூட் தலைமையில் குழுவாக ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் குறைவதை ரூட் கவனித்தாலும், நேரம் குறைவாக இருந்ததால், இதுகுறித்து கண்டுகொள்ளாமல் ஜோ ரூட் ஆலோசனை செய்து வந்தார்.

image

அப்போது, பாதி ஆலோசனைக் கூட்டம் நடந்து முடிந்த பிறகுதான் மார்க் உட் ஆலோசனை நடப்பதைப் பார்த்தார். இனி அங்கு சென்றால் நேரம் ஆகிவிடும் என்பதை உணர்ந்த அவர், சற்று நேரம் நின்றுவிட்டு ஆலோசனை செய்ய கூடியிருந்தவர்களைப் பார்த்து, அவரும் ஆலோசனையில் பங்கேற்றதை போல், நின்ற இடத்திலேயே சைகை செய்தார். இதனைக் கண்ட ரசிகர்கள், வர்ணனையாளர்கள் சிரித்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.