“வெயிலில் அலைவதால் முகத்தில் ஏற்படும் கறுமை, பரு, சுருக்கங்களுக்கு நல்ல தீர்வு கொடுக்கக்கூடியது, சார்கோல் ஃபேஷியல். குறிப்பாக, மாநிறமாக இருப்பவர்களுக்கு இந்த சார்கோல் ஃபேஷியல் நல்ல ரிசல்ட் கொடுக்கும்.

வசுந்தரா

பிளாக் டைமண்ட் ஃபேஷியல் (Black diamond facial) என்று சொல்லப்படும் சார்கோல் பேஷியலை எளிய முறையில் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்” என்று கூறும் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா, அதற்கான வழிமுறைகளை ஒவ்வொரு ஸ்டெப்பாகக் கூறுகிறார்.

குறிப்பு: இதற்கு magnetic diamond facial அல்லது black diamond facial கிட்டை பயன்படுத்த வேண்டும்.

க்ளென்சிங் (cleansing):

* “எந்தவித ஃபேஷியல் செய்வது என்றாலும், அதற்கு முதலில் முகத்தை சுத்தப்படுத்திட வேண்டும். எந்த வகையான க்ளென்சிங் க்ரீம் கொண்டும் சுத்தப்படுத்தலாம். சார்கோல் ஃபேஷியலுக்கு கிவி க்ளென்சிங் க்ரீம் பரிதுரைக்கத்தக்கது.

இதை முகத்தில் அப்ளை செய்து வட்டமாக மசாஜ் செய்யவும். இதன்மூலம் இறந்த செல்கள் நீங்கும். இதனை டீப் போர் க்ளென்சிங் (deep bore cleansing) என்று சொல்லலாம், நல்ல ரிசல்ட் கொடுக்கும்.

ஸ்கரப்:
* பிளாக் டைமண்ட் ஸ்கரப் – இந்த ஸ்கரப்பை முகத்தில் அப்ளை செய்யும்போது, இதில் இரும்புச் சத்து அதிகமுள்ளதால் முகத்துக்குப் புத்துணர்ச்சியையும், பளபளப்பையும் கொடுக்கும். நிறைய வைட்டமின்கள் உள்ளதால் இது முகத்திற்கு ஊட்டச்சத்து அளிக்கக்கூடியது என்பதால், சார்கோல் ஃபேஷியலில் முக்கியப் பகுதியாக ஸ்கிரப்பிங் பார்க்கப்படுகிறது.

Skin care

இந்த ஸ்கரப்பை முகத்தில் அப்ளை செய்து மிருதுவாக மசாஜ் செய்யவும். பின் இந்த ஸ்கரப்பை சுத்தம் செய்வது மிக இன்ட்ரெஸ்டிங்கான விஷயமாக இருக்கும். காரணம் இதனை நார்மலாகத் துடைத்து எடுக்க முடியாது. இதற்கென ஸ்பெஷல் கருவி ஒன்று இருக்கும். இது மேக்னெட் மூலம் செய்யப்பட்டிருக்கும். இதனை ஸ்க்ரப் அருகே கொண்டு செல்லும் போது காந்தத்தை ஈர்ப்பது போன்று அந்த ஸ்க்ரப்பை இந்த கருவி ஈர்க்கும். அப்போதே முகத்தில் ஏற்படும் மாற்றத்தை நம்மால் உணர முடியும்.

மசாஜ்:
* அடுத்து ஒரு சிறிய மசாஜ் தேவைப்படும். இதற்கு கிவி, பிஸ்தா போன்றவை கலந்து செய்யப்படும் மசாஜ் கிரீமை பயன்படுத்த வேண்டும். இதனை மிக மெருதுவாக முகத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். எண்ணெய் சருமத்திற்கும், பரு பிரச்னைக்கும் இது மிகச் சிறந்த மருந்தாக அமையும்.

மாஸ்க்:

* பிளாக் ஜெல் மாஸ்க்கை (black gel mask), மசாஜ் செய்த கிரீமை துடைக்காமல் அதன் மேலேயே அப்ளை செய்திட வேண்டும். அதன் பின் பன்னீரில் நனைத்த பஞ்சை கண்ணின் மேற்புறத்தில் வைத்து 15 – 20 நிமிடங்கள் அப்படியே விடவேண்டும்.

அதன் பின் ஒரு டோனரை எடுத்து, மிஸ்ட் போன்று முகத்தில் ஸ்ப்ரே செய்து, பின் மாஸ்க்கை ஒரு காட்டன் துணி கொண்டு மிருதுவாகத் துடைத்து எடுக்க வேண்டும். இதனை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை செய்து கொள்வது நல்லது. முகத்திற்கு நல்ல பலனை தரக்கூடிய இந்த ஃபேசியல் தற்போது மற்ற நாடுகளில் மிகப் பரவலாகப் பெண்களால் பின்பற்றப்படும் ஒரு ஃபேசியல் முறையாக உள்ளது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.