மதுரை மேலூர் நகராட்சியில் ஹிஜாப் பிரச்னை எழுந்த 8வது வார்டில் பாஜகவுக்கு 10 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. 

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் 8-வது வார்டில் அமைக்கப்பட்டிருந்த ஒரு வாக்குச்சாவடிக்கு கடந்த பிப்ரவரி 19-ம் தேதி அன்று முஸ்லிம் பெண்கள் பலர் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்தனர். அவர்களில் முதலாவதாக ஒரு பெண் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வாக்குச்சாவடிக்குள் நுழைந்தார். அப்போது பாஜக முகவர் கிரிராஜன் என்பவர், அந்தப் பெண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும்  ஹிஜாப்பை கழற்றிவிட்டு வாக்குச்சாவடிக்குள் வரும்படி அந்த பெண்ணிடம் வாக்குவாதம் செய்தார்.

இதற்கு  வாக்குச்சாவடியில் உள்ள மற்ற திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சியைச் சேர்ந்த முகவர்கள், பாஜக முகவரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சிறிதுநேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முகவர் கிரிராஜன் வாக்குப்பதிவு மையத்திலிருந்து அப்புறபடுத்தியதை அடுத்து வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து பாஜக முகவர் கிரிராஜன் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் மதுரை மேலூர் நகராட்சியில் ஹிஜாப் பிரச்சினை எழுந்த 8வது வார்டில் பாஜகவுக்கு 10 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. மேலூர் நகராட்சியின் 8வது வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை முழுமையாக உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 2022

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.