அசாம் மாநிலத்தில் பணிபுரிந்து வரும் அரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி 6 மற்றும் 7-ஆம் தேதி என இரண்டு நாட்கள் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. “அரசு ஊழியர்கள் தங்களது பெற்றோருடனும், வீட்டில் உள்ள பெரியவர்களுடனும் தங்களது இனிதான நேரத்தை செலவிட வேண்டும் என்பதற்காக இந்த விடுப்பு” என தெரிவித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா.

To uphold ancient Indian values, I urge Assam Govt employees to spend quality time with their parents/in-laws on Jan 6 & 7, 2022 designated as spl leave.

I request them to rededicate themselves to the cause of building a New Assam & New India with blessings of their parents. pic.twitter.com/hZ2iwbgKoB
— Himanta Biswa Sarma (@himantabiswa) January 2, 2022

இதனை ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார் அவர். கடந்த நவம்பரில் இந்த முடிவுக்கு ஒப்புதல் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி 6 மற்றும் 7-ஆம் தேதி விடுப்பு (கேஷுவல் லீவ்) எனவும், அதற்கடுத்த இரண்டு நாட்கள் சனி (8) மற்றும் ஞாயிறு (9) என்பதால் வீட்டு பெரியவர்களுடன் கூடுதலாக நேரம் செலவிடலாம் எனவும் அசாம் மாநில பொது நிர்வாகத்துறை தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

image

சிவில் சர்வன்ட் அதிகாரிகள் தொடங்கி நான்காவது கிரேட் அரசு ஊழியர்கள் வரை அனைவருக்கும் இந்த விடுப்பு என தெரிவித்துள்ளார் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.