`ஜனவரி 10-ம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ்!” -மோடி

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “உலகின் முதல் மரபணு தடுப்பூசி இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்தியாவில் மேலும் பல தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அதே போன்று மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்துகளும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. உலகிலேயே முதல் முறையாக மரபணு தடுப்பூசி மற்றும் மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யபட உள்ளது.

இந்தியாவில் முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 10-ம் தேதி முதல் கூடுதல் தடுப்பூசி செலுத்தப்படும். அதாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இந்தியாவில் மருத்துவ பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் ஜனவரி 10-ம் தேதி முதல் செலுத்தப்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.

“ஜனவரி 3-ம் தேதி முதல் 15 -18 வயதுள்ளோருக்கும் தடுப்பு ஊசி”

தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி, “கோவா, உத்தரகாண்டில் முதல் தவணை தடுப்பூசி 100% செலுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 3-ம் தேதி முதல் 15 -18 வயதுள்ளோருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்படும்.” என்றார்

ஒமைக்ரான் பரவல்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை!

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அவர், “உலகம் முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் தற்போது படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை முழுமையாக இல்லை. மருத்துவமனைகளில் தட்டுப்பாடு இன்றி ஆக்ஸிஜன் கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் குறித்து மக்கள் பதற்றமடைய தேவையில்லை. எதிர்த்துப் போராட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கைகழுவுதல், மாஸ்க் அணிதல் போன்றவற்றை எப்போதும் மறந்து விடாதீர்கள்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.