திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில், நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை ஆருத்ரா அபிஷேகம் நடைபெற்றது. இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோயிலின் உபகோவிலான, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், சிவபெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில், முதல் சபை என்பதால், ரத்தினசபை என்றழைக்கப்படுகிறது. மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜருக்கு அபிஷேகம் நடப்பதையே, ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.

image

இந்நிலையில், நேற்று இரவு, திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில், நேற்று இரவு முதல், இன்று அதிகாலை வரை ஆருத்ரா அபிஷேகம் நடைபெற்றது. இதில், 33 வகையான பழங்களைக் கொண்டு நடராஜ பெருமானுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

image

இவ்விழாவில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த சிவனடியார்கள், ஆருத்ரா தரிசனத்தை கண்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் பரஞ்சோதி மற்றும் கோவில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.