இந்திய மொழிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க தொலைநோக்குத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக பாரிவேந்தர் எம்.பி., எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ளபடி இந்திய மொழிகளின் வளர்ச்சியை உறுதிசெய்ய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதா என பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

நல்லவர்கள் கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் - மநீம கூட்டணிக்கு ஆதரவாக  பாரிவேந்தர் பரப்புரை! | Paarivendhar campaigns in support of makkal needhi  maiam alliance ...

அதில், இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்க சாமு கிருஷ்ண சாஸ்திரி தலைமையில் வல்லுனர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய மொழிகளை கற்பிப்பது, வளர்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் பயன்பாட்டை விரிவுபடுத்துவது போன்ற நடவடிக்கைகளுக்காக இந்தக் குழு மத்திய கல்வித் துறை அமைச்சகத்துக்கு ஆலோசனைகள் அளிக்கும் என அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.