தஞ்சை அருகே 62 ஆயிரம் ரூபாய்க்கு, செம்மறி ஆடு மேய்க்கும் தொழிலுக்கு கொத்தடிமைகளாக விற்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

தஞ்சை வல்லம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மற்றும் இவரது மனைவி பாப்பாத்தி. இருவரும் கரிப்புகை மூட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு நான்கு மகன்கள் ஒரு மகள் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆன நிலையில் நான்கு மகன்களுடன் சுந்தர்ராஜன் வசித்து வருகிறார். இந்நிலையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. கோவிந்தராஜ் அவரது அண்ணன் மணிராசு, மைத்துனர் செல்வம் ஆகியோருடன் இணைந்து அங்கேயே உரத்திற்காக செம்மறி ஆடு மேய்த்து வந்துள்ளார்.

image

கரிப்புகை மூட்டும் தொழிலில் போதுமான வருமானம் இல்லாததால் சுந்தர்ராஜன் தனது நான்கு மகன்களையும் கோவிந்தராஜிடம் 62 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஆடு மேய்ப்பதற்காக கொத்தடிமைகளாக விட்டுள்ளார். தஞ்சை மன்னார்குடி பிரிவு சாலை சூரக்கோட்டை அருகே சிறுவர்கள் ஆடு மேய்த்துக்கொண்டு இருப்பதை பார்த்த ஒரு வழிப்போக்கர் 1098 சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து செல்களின் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் தாலுகா காவல்துறையினர் நான்கு சிறுவர்களையும் மீட்டு சிறுவர்கள் இல்லத்தில் சேர்த்தனர்.

image

இதனையடுத்து கோவிந்தராஜ் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்து இந்த நான்கு சிறுவர்களையும் வேலைக்கு வைத்துள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் 4 சிறுவர்களுக்கும் கொத்தடிமை விடுதலை உத்தரவை வழங்கினார். மேலும் தாலுகா போலீசார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்துவருகின்றனர்.

சென்னை: தற்கொலை முயற்சிசெய்த மாணவி.. இறந்து பிறந்த குழந்தை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.