வெலிங்டனில் சதுக்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் உடல்கள்!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு வீர வணக்கம் செலுத்த மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர் ஸ்ரீ நாகேஷ் பேரக்ஸ் சதுக்கத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த 13 பேரின் உடல்களில் தேசியக் கொடிப் போர்த்தி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ ட்ரக்குகளில் ஸ்ரீ நாகேஷ் பேரக்ஸ் சதுக்கத்துக்கு கொண்டு வரப்பட்டது. உயிரிழந்த ராணுவ முப்படை தளபதி உள்ளிட்டோரின் உடலுக்கு முதல்வர், முப்படைகளின் தளபதிகள் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.

கருப்புப்பெட்டி மீட்கப்பட்டது!

கோவை மாவட்டம் சூலூர் விமான தளத்திலிருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டனுக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்ற முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்நிலையில் தமிழக தடயவியல் துறை இயக்குநர் சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டிப் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து, ஹெலிகாப்டர் விபத்து நடந்தது எப்படி?

குன்னூர் வெலிங்டனில் இருந்து நேரலை…

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து – விமானப்படை தளபதி நேரில் ஆய்வு! 

கோவை மாவட்டம் சூலூர் விமான தளத்திலிருந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டனுக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்ற முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஒருவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக இந்திய விமானப் படையின் தளபதி மார்ஷல் வி.ஆர் சவுத்ரி தற்போது நீலகிரி மாவட்டம் குன்னூரில் தங்கி இருக்கிறார். விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியில் தற்போது அவர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் அவர். அவருடன் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவும் உடன் இருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.