சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் மழைக்காலங்களில் மழை நிற்கும் வரை இருமுடியோடு பம்பையில் காத்திருக்கலாம் எனவும், மழை நின்ற பிறகு அவர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் கிளம்பி வந்து சாமி தரிசனம் செய்யலாம் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.

சபரிமலையில் தற்போது மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 16ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினசரி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை சராசரியாக 40 ஆயிரம் கடந்து உள்ளது. இந்நிலையில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக பம்பையில் குளிக்கவும், பக்தர்கள் பம்பை சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் பெரும் சிரமம் கொண்டு வந்தனர்.

2 மணி நேரத்தில் முடிந்தது சபரிமலை தரிசன புக்கிங்... 63 நாள்களுக்கு 86,000  பக்தர்கள் முன்பதிவு! | Sabarimala temple online darshan booking update

பக்தர்களின் வசதிக்காக பக்தர்களை பம்பையில் குளிக்க அனுமதிக்கவும், குறைந்தது 8 மணி நேரமாவது சபரிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தங்கி செல்ல அனுமதி வழங்கவும், தேவசம்போர்டு சார்பில் கேரள அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை வைத்தது. பக்தர்கள் தங்கிச் செல்ல அனுமதி இல்லாததால் மழைக்காலங்களில் ஐயப்ப பக்தர்கள் இரு முடியோடு மழையில் நனைந்தவாறு பதினெட்டாம் படியேறி நடை பந்தலில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு ஐயப்ப பக்தர்கள் ஏன் சிரமம் போக்க, மழை காலங்களில் பக்தர்கள் நனைந்தவாறு பம்பையில் இருந்து சன்னிதானம் வரவேண்டாம் என்றும், இருமுடியை பம்பையிலே வைத்து கொண்டு மழை நிற்கும் வரை காத்திருக்கலாம் எனவும், மழை நின்ற பிறகு பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் கிளம்பி வந்து சாமி தரிசனம் செய்யலாம் எனவும் அதற்கான அனுமதி வழங்கியும் சபரிமலை உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சன்னிதானத்தில் சபரிமலை சிறப்பு அதிகாரி அர்ஜுன் தலைமையில் தேவஸ்வம் போர்டு நிர்வாகிகள், போலீஸ் பாதுகாப்பு படைப் பிரிவினரின் ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.