இல்லற வாழ்க்கை துவங்கும் நாளிலேயே 1000 மரகன்றுகளை நட்ட மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த புதுமணத் தம்பதிகள்.

கடந்த 10 வருடங்களாக மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருபவர் மனோஜ்தர்மர். சொல்வது மட்டுமல்லாமல், செயலிலும் அதை நிரூபித்துள்ளார். திருச்சியில் மனோஜ்தர்மர் – திவ்யா தம்பதிகளின் திருமண விழா இன்று நடைபெற்றது. ”மண விழாவிற்க்கு வருபவர்கள் பணமோ,பரிசு பொருட்களோ கொண்டு வரவேண்டாம் என்பது எங்களது வேண்டுகோள். திருமணத்திற்க்கு வருபவர்கள் எங்களை வாழ்த்தி விட்டு 1000 மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்று உங்கள் பங்களிப்புடன் அன்பளிப்பாக ஒரு மரக்கன்று நட வாருங்கள்” என அழைப்பும் விடுத்திருந்தார்.

image

புதுமண தம்பதிகள் திருமண மண்டபத்தை விட்டு நேரடியாக அடர்வனகாடுகள் இருக்கும் பகுதிக்கு சென்றனர். அங்கு பணி புரியும் வயதான பெண்கள் இவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். தலையில் பூக்களால் ஆன கிரீடம் அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர். கைதட்டி ,பாட்டு பாடு நடனமாடி புதுமண தம்பதிகளை உள்ளே அழைத்து சென்றனர். புதுமணத் தம்பதிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் இருங்களூர் ஊராட்சி மன்ற தலைவர் வின்சென்ட் உள்ளிட்டோரும் விளையாட்டு இப்போட்டிகளில் பங்கேற்றனர்.

லட்சக்கணக்கில் செலவு செய்து உறவினர்களை அழைத்து விருந்து வைத்து திருமண விழாவை நடத்துவதை அனைவரும் பார்த்து பங்கேற்று வருகிறோம். ஆனால் தங்கள் இல்லற வாழ்க்கையைத் துவங்கும் நாளிலேயே நேரடியாக சென்று ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் மனிதவளத்தை மரம் காக்கும் என்ற ஆழமான கருத்தையும் இத் தம்பதிகள் உணர்த்தியுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.