`அக்குள் கருமையை நீக்குவது எப்படி? பல க்ரீம்கள், கெமிக்கல்கள் எனப் பலவற்றைப் பயன்படுத்தினாலும் நிரந்தரத் தீர்வை பெற முடிவதில்லையே..?’ – பல பெண்களின் கேள்வி இது. இதற்குத் தீர்வாக வீட்டிலேயே, எந்தவித கெமிக்கலும் இல்லாமல் அக்குள் கருமையை எவ்வாறு நீக்குவது என்று கூறுகிறார் பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா.

தெரபிஸ்ட் வசுந்தரா

Also Read: How to series: டீ ட்ரீ ஆயில் – முகம், கேசத்துக்கு எவ்வாறு பயன்படுத்துவது? | How to use tea tree oil?

ரோமம், வியர்வை, உராய்வு போன்ற காரணங்களால் அக்குளில் கருமை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் ஸ்லீவ்லெஸ் உடை அணிய சிலருக்கு அசௌகர்யமாக இருக்கலாம். “டோன்ட் வொர்ரி… அக்குள் கருமையை சுலபமாகப் போக்கலாம்” என்றபடி தொடர்ந்த வசுந்தரா, அதற்கான செயல்முறையை ஸ்கிரப், பேக் என இரண்டாகப் பிரித்துக்கொள்ளச் சொல்கிறார்.

ஸ்டெப் 1 – ஸ்கிரப்

“முதலில் ஸ்க்ரப்பை கருமை உள்ள இடங்களில் பயன்படுத்த வேண்டும். அதற்கு, ஒரு டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரையுடன் எலுமிச்சை சாற்றை நன்றாகக் கலந்துகொள்ளவும். இதுதான் நாம் பயன்படுத்தப்போகும் ஸ்கிரப் (எலுமிச்சை சாற்றுடன் நாட்டுச் சர்க்கரையைக் கலந்து அப்ளை செய்வதால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது).

கடலை மாவு

Also Read: How to series: How to get rid of oily skin? | எண்ணெய்ப்பசையான சருமம்; விடுபடுவது எப்படி?

எலுமிச்சை சாறு இறந்த செல்களை நீக்கும். இந்த ஸ்கிரப்பை கருமை இருக்கும் பகுதிகளில் அப்ளை செய்து மென்மையாக மசாஜ் செய்யவும்.

ஸ்டேப் 2 – பேக்

அடுத்ததாக ஒரு டீஸ்பூன் கடலை மாவு, 1/4 டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், 1/4 டீஸ்பூன் வேப்பிலை பவுடர், 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை, ஏற்கெனவே அப்ளை செய்து வைத்திருக்கும் ஸ்கிரப் மேலேயே அப்ளை செய்யவும். அதிகம் அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக மசாஜ் செய்யலாம். பின்னர் 15 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருந்துவிட்டு, மீண்டும் மசாஜ் செய்துவிட்டு, குளிர்ந்த நீரால் துடைத்து எடுத்துவிடலாம், அல்லது குளித்துவிடலாம்.

இந்த பேஸ்ட்டில் உள்ள வேப்பிலை, கடலைமாவு உடலில் உள்ள கருமையை நீக்குவதுடன், ஏதேனும் மரு இருந்தாலும் அவை நீங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. எந்தவித கெமிக்கலும் இல்லாத இயற்கை பேக் இது என்பதால் தினமும் பயன்படுத்தலாம், ஒரு வாரத்தில் நல்ல மாற்றம் தெரியும்” என்றார்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.