ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில் இந்தியா வரும் பயணிகளுக்கான விதிமுறைகளை மத்திய அரசு மீண்டும் கடுமையாக்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துவரும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கொரோனா, உலகின் பிற நாடுகளுக்கு பரவி வருகிறது. இதனை தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, இந்தியா வரும் பயணிகளுக்கான விதிமுறைகளை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. இதன்படி, பயணம் தொடங்குவதற்கு முந்தைய 14 நாட்கள் எங்கெங்கு சென்றீர்கள் என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட RTPCR நெகட்டிவ் சான்று இருந்தால் மட்டுமே அனுமதி என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விவரங்களை AIR SUVIDHA என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டியது அவசியம். ஒமைக்ரான் வகை கொரோனா பரவிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் அதன்முடிவு தெரியும் வரை விமான நிலையத்தில்தான் இருக்கவேண்டும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.