நன்றி தெரிவிக்கும் நாள் கொண்டாட்டத்துக்காக தயாரிக்கப்பட்ட உணவுகளை பார்சல் செல்வதற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் உதவி செய்தனர்.
 
தமிழ்நாட்டில், அறுவடையை கொண்டாடும் வகையில் பொங்கல் கொண்டாடப்படுவது போல், அமெரிக்காவில் நவம்பர் 25 ஆம் தேதி, நன்றி படையல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேவையுள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்த உணவுகளை ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடனும், கமலா ஹாரிஸ் தனது கணவர் டக்ளஸ் எம்ஹாப்புடன் பார்சல் செய்வதற்கு உதவினர். முன்னதாக அதிபர் பைடன், தனது மனைவி ஜில் பைடனுடன் இணைந்து ராணுவ வீரர்களுக்கு விருந்து அளித்தார்.
 
 
 
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.