வழக்கமாக போராட்டம் என்றால் முற்றுகையிடுவது, உண்ணாவிரதம் இருப்பது, கருப்புக் கோடி ஏந்துவது மாதிரியானவையானதாக இருக்கும். ஆனால் கர்நாடக மாநிலத்தில் நூதன போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது அங்கு செயல்பட்டு வரும் ‘ஸ்ரீ ராம சேனா’ என்ற குழு. 

சுமார் 15 பேர் அடங்கிய ஸ்ரீ ராம சேனா குழுவினர் அந்த மாநிலத்தில் உள்ள கடக் நகராட்சி அலுவலகத்தில் நூதன போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். 

நகரப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறைகளை சீரமைக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை. அதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் நகராட்சி அலுவலர்களை சந்தித்து முறையிட்டுள்ளனர். அப்போது தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் நகராட்சி அலுவலக வளாகத்தில் சிறுநீர் கழிக்கும் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்துள்ளனர். 

அவர்கள் அலுவலர்களிடம் சொல்லி ஒரு வார காலமாகியும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என தெரிகிறது. அதன்படி இன்று நகராட்சி அலுவலகம் வந்த அவர்கள் வளாகத்தினுள் சிறுநீர் கழித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை களைத்துள்ளனர். 

8 முதல் 10 நாட்களுக்குள் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் மீண்டும் இதையே செய்வோம் என எச்சரித்துள்ளனர் ஸ்ரீ ராம் சேனா குழுவினர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.