ஸ்டாலினின் கோவை விசிட்… ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக இன்று கோவை வருகிறார். விழா நடைபெறும் அரங்கில், அ.தி.மு.க கொறடா எஸ்.பி. வேலுமணி, பா.ஜ.க வானதி சீனிவாசன் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு முன்வரிசையில் இருக்கை போடப்பட்டுள்ளது.

இதனிடையே, முதல்வர் மு.க. ஸ்டாலின் கோவை வருகையை முன்னிட்டு, #GoBackStalin ஹேஷ்டேகையும், தி.மு.கவினர் #KovaiWelcomesStalin என்ற ஹேஷ்டேகையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சென்னையில் மழை…!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. கடந்த இரண்டு வாரங்களாக தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்திருக்கிறது. பல இடங்களில் வெள்ளம் தேங்கி இருக்கிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு தமிழகம் வந்திருக்கிறது. அந்த குழு இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது. தொடர்ந்து சென்னையில் முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை செய்யும் மத்திய குழு, வரும் 24-ம் தேதி டெல்லி புறப்பட்டு செல்லும்.

சென்னை மழை

இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் பணிக்கு இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்த வாரமும் தமிழகத்தில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.