நடப்பு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி, தொடரை விட்டு வெளியேறி உள்ளது. சூப்பர் 12 சுற்றில் வெல்ல முடியாத அணியாக வலம் வந்த பாகிஸ்தான் அணிக்கு இந்த தோல்வி பலத்த வலியை கொடுத்திருக்கும். இந்த நேரத்தில் அவர்களுக்கு தங்கள் வார்த்தைகளால் ஆறுதல் சொல்லியுள்ளனர் சில கிரிக்கெட் மற்றும் அரசியல் பிரபலங்கள். 

அதன் தொகுப்பு இங்கே…

View this post on Instagram

A post shared by Imran Khan (@imrankhan.pti)


இம்ரான் கான் – பாகிஸ்தான் பிரதமர்

“பாபர் ஆசாம் மற்றும் அணியினருக்கு… நீங்கள் அனைவரும் தற்போது எப்படி இருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். ஏனெனில் நானும் இது மாதிரியான ஏமாற்றங்களை நான் கிரிக்கெட் விளையாடிய நாட்களில் உணர்ந்தது உண்டு. ஆனால் நீங்கள் அனைவரும் பெருமை அடைய வேண்டும். களத்தில் நீங்கள் தரமான கிரிக்கெட் விளையடி உள்ளீர்கள். ஆஸ்திரேலிய அணிக்கு பாராட்டுகள்” என அவர் தெரிவித்துள்ளார். 

மரியம் நவாஸ் ஷெரீப் – முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள்

“மிளிர்கின்ற நட்சத்திரமாக இருந்தது உங்களது ஆட்டம். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினீர்கள். விளையாட்டில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். உங்களை எண்ணி நாடே பெருமை கொள்கிறது” என தெரிவித்துள்ளார். 

ரமீஸ் ராஜா – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் 

“அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக நன்றி. களத்தில் நீங்கள் போராடிய விதம் எங்களுக்கு பெருமை. வெல் டன்” என தெரிவித்துள்ளார். 

ஹர்பஜன் சிங் – முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்

“ஷதாப் கானிடமிருந்து மாஸ்டர் கிளாஸான ஆட்டத்தை பார்க்க முடிந்தது. என்னவொரு ஆட்டம்? கிரேட் ஸ்பெல். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சுழற்பந்து வீச்சின் ராஜாங்கம் தான்” என தெரிவித்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.