கோவை மாவட்டத்தில் அதிமுக அசுரபலத்துடன் இருப்பதையும், திமுக பலவீனமாக இருப்பதையும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மீண்டும் ஒருமுறை உணர்த்திவிட்டன. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் கட்சியை வளர்த்தெடுக்க அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவைப் பொறுப்பாளராக நியமித்திருக்கிறது திமுக.

அமைச்சர் செந்தில் பாலாஜி

Also Read: கோவை மாவட்டத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி! – திமுக-வின் திட்டம் என்ன?

அதன் பிறகு இரண்டு முறை கோவைக்கு வந்துவிட்ட செந்தில் பாலாஜிக்கு முதல் சவாலாக இருப்பது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல். அதில் பெரும் வெற்றியைப் பெற்று தனது செல்வாக்கை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். கோவை மாவட்டத்தில் திமுக செல்வாக்கை உருவாக்கவேண்டிய கட்டத்தில் செந்தில் பாலாஜியும், அங்கு ஏற்கெனவே இருக்கும் செல்வாக்கை நிலைநிறுத்த வேலுமணியும் செய்யும் அரசியல் பரபரக்கத் தொடங்கியிருக்கிறது.

தனது முதல் விசிட்டிலேயே திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்துப் பேசியிருந்தார். அப்போது பேசிய செந்தில் பாலாஜி, “உள்ளாட்சித் தேர்தலில் நாம் வெற்றிபெற வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் சுற்றுப்பயணம் வருவோம். நீங்கள் யார் போஸ்டர் அடித்தாலும், முறையாகச் செய்ய வேண்டும். யார் பெயரையும் விட்டுவிடக் கூடாது. நான் இனி இங்குதான் இருப்பேன். எப்போது நேரம் கிடைத்தாலும் வந்துவிடுவேன்.

செந்தில் பாலாஜி

வாரத்துக்கு மூன்று நாள்கள் வருவேன். ஜெயிப்பதற்கு என்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்வேன். எந்த நேரத்திலும் அழைப்பேன். அதற்கு நீங்களும் நன்கு களப்பணியாற்ற வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் செல்வாக்கான மூன்று நபர்களின் பட்டியலை எடுங்கள்” என்றார்.

இரண்டாவது விசிட்டிலேயே ஒவ்வொரு பகுதிவாரியாக செந்தில் பாலாஜி விசிட் அடிக்கத் தொடங்கிவிட்டார். `கோவை மக்கள் சபை’ என்ற பெயரில், ஆங்காங்கே மக்களிடம் மனுக்கள் வாங்கத் தொடங்கிவிட்டார். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுவருகிறார்

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

Also Read: நேருவுக்காகத் தவிக்கும் ஸ்டாலின் முதல் அதிமுக-வினருக்குப் பூங்குன்றன் அட்வைஸ் வரை கழுகார் அப்டேட்ஸ்!

உக்கடம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தில் பெயின்ட் அடிப்பது, விளையாடிக்கொண்டிருக்கும் இளைஞர்களைச் சந்தித்துப் பேசுவது என்று இறங்கியடித்துவருகிறார். அதிமுக ஆட்சியில் திமுக நிர்வாகிகள்மீது வழக்கு பதியவைத்து டெரர் காட்டினார் வேலுமணி.

அதேபோல தற்பேபோது, சிங்காநல்லூர் பகுதிக்கும் செந்தில் பாலாஜி சென்றிருந்தார். அப்போது தொகுதிக்குள் பணிகள் ரத்து செய்யப்படுவதாக, திமுக-வைக் கண்டித்து அதிமுக-வினர் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இதையடுத்து, அந்த போஸ்டரை ஒட்டிய அதிமுக பகுதிப் பொறுப்பாளர் ரகுபதிமீது பொது இடங்களில் அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.

அதிமுக போஸ்டர்

கோனவாய்க்கால்பாளையம் பகுதிக்கு செந்தில் பாலாஜி சென்றபோது கூட்டமே இல்லை. உட்கட்சிப் பூசல் காரணமாக செந்தில் பாலாஜி வருகை ஏற்பாட்டை உடன்பிறப்புகள் செய்யவில்லை. கடுப்பான செந்தில் பாலாஜி, அங்குள்ள நிர்வாகிகளைக் காய்ச்சி எடுத்துவிட்டாராம்.

செந்தில் பாலாஜி வருகையால் அதிமுக உச்சகட்ட அலர்ட்டில் இருக்கிறது. சிறிய வாய்ப்புகூட கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். சமீபத்தில் செந்தில் பாலாஜியும், எஸ்.பி.வேலுமணியும் ஒரே விமானத்தில் பயணித்திருக்கின்றனர். வேலுமணி உடனடியாகத் தனது ஆதரவாளர்கள் ஏராமானோரை இறக்கி, விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க வைத்து அதகளப்படுத்தியிருக்கிறார்.

வேலுமணி

ஆனால், செந்தில் பாலாஜியை வரவேற்க பெரிய அளவில் கூட்டம் இல்லை. ஆரம்பத்திலிருந்தே செந்தில் பாலாஜிக்கு அதிரடிகாட்ட வேண்டும் என்று வேலுமணி தரப்பு நினைக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோற்றாலும், கோவை மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவியை அதிமுக மீண்டும் பிடித்துவிட்டது.

அந்த உற்சாகத்தில் அதிமுக-வினரும் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கின்றனர். அதில் பேசிய எஸ்.பி.வேலுமணி, “ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு குளறுபடிகள் செய்திருக்கின்றனர். கோவை முழுவதும் நாம்தான் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறோம். இங்கு நாம் வலுவாக இருக்கிறோம். இப்போதிருந்தே பணியாற்ற வேண்டும். வார்டுவாரியாக அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்றுங்கள்.

வேலுமணி

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற திமுக எதைச் செய்யவும் தயங்க மாட்டார்கள். திமுக-வினர் வென்றால் உங்களுக்கு மரியாதையே போய்விடும். ஒற்றுமையாகப் பணியாற்றினால் நம்முடைய வெற்றி உறுதி” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.