புதிய கல்விக்கொள்கையில் என்ன தவறை அமைச்சர் கண்டுபிடித்தார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை “காங்கிரஸ் ஆட்சியின்போது இரண்டுமுறை கல்விக்கொள்கையை மாற்றி இந்தி படிக்க வேண்டும் என்பதைக் கொண்டு வந்தனர். ஆனால் பிரதமர் மோடிதான் இதனை விருப்பப்பாடமாக கொண்டு வந்தார். தற்போது புதிய கல்விக்கொள்கையில் சில புதிய வழிமுறைகளை கொண்டு வந்துள்ளனர். அதில் எல்லாவற்றையும் மாற்றியுள்ளனர். இதனை மாற்ற மத்திய அரசுக்கு உரிமை உள்ளது. எது சரியாக இல்லை என்பதை கல்வி அமைச்சர் தெளிவாக சொல்ல வேண்டும். நிறைய மாநிலங்கள் புதிய கல்விக்கொள்கையை வரவேற்றுள்ளனர். புதிய கல்விக்கொள்கையை மத்திய அரசு தானாகக் கொண்டு வரவில்லை. மாநிலங்களில் கருத்து கேட்டு, ஆலோசகர்களின் கருத்துக்களை கேட்டுத்தான் புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்று கூறினார். 

image

அவரிடம் தேவர் ஜெயந்தி கொண்டாட்டத்தில் இளைஞர்கள் பஸ் கண்ணாடியை உடைத்து வன்முறையில் ஈடுபட்டது குறித்து கேட்டபோது, “ தேவர் ஜெயந்தி எதற்காக இத்தனை கட்டுப்பாடுகள் விதித்து கொண்டாடப்பட வேண்டும். கெடுபிடிகள் போடும் போதுதான் இளைஞர்கள் சில விஷயங்களை செய்கின்றனர். பிரச்னை இல்லாமல் தேவர் ஜெயந்திக்கு சென்றுவர மக்கள் விரும்புகின்றனர். கெடுபிடிகள் அதிகமாக அதிகமாக இளைஞர்கள் அத்துமீறுகின்றனர். காவல்துறை அதிகாரிகள் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

‘நான் இனவாதி அல்ல’ –  ஒடுக்குமுறைக்கு எதிராக மண்டியிட்ட டீ காக்! 

தொடர்ந்து கூட்டணிக்கட்சி குறித்து கேட்டபோது, “ பாஜக கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. இது சந்தர்ப்பவாத கூட்டணி இல்லை. நல்ல ஆட்சி அமைய வேண்டும். இது நல்ல சிந்தாந்தம் உள்ள கூட்டணிதான். கூட்டணியில் பிளவு வர எந்தக்காரணமும் இல்லை. அதிமுக நன்றாக பலமாக இருக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம். நல்ல தலைவர்கள் அதிமுகவில் உள்ளனர். எந்தப் பிரச்னையும் அங்கு இல்லை. நம் கூட்டணி எப்போதும் அதிமுகவுடன்தான். அதிமுக போன்ற மிகப்பெரிய சக்தி வாய்ந்த கட்சியுடன் பாஜக கூட்டணியில் இருக்கும். இவங்க வருவாங்க அவங்க வருவாங்க என்பது குறித்து கருத்துச்சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை. அதிமுகவோடு கூட்டணி தொடர்கிறது. அங்குள்ள உள்கட்சி விவகாரம் குறித்து கருத்துச்சொல்ல நான் யார்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

image
நீட் தேர்வு குறித்து கேட்டபோது, “ நீட்டை வைத்து அரசியல் நடத்துகிறது அரசியல் கட்சிகள். நீட் தேர்வினால் எந்த மாணவரும் உயிரை விடக்கூடாது. தேர்தல் நேரத்தில் தேர்வு குறித்து பேசியதுதான் இங்கு பிரச்னையே. நீட்டை மட்டும் வைத்து பேசி இவர்களுக்கு என்ன கிடைக்கிறது என தெரியவில்லை. நீட்டை பொறுத்தவரை பாடத்திட்டம் மாறியுள்ளது’’ என்றார். மேலும், தன்னை பற்றி சமூக ஊடகங்களில் வரும் மீம்ஸ்களுக்கு பதிலளித்த அவர்,  “என்னை பற்றிய மீம்ஸ்களை ரசிச்சுக்குவோம். சிரிச்சுக்குவோம். என்னைப்பற்றி யார் என்ன சொன்னாலும் கவலைப்படுவதில்லை. தமிழக மக்கள் நலன் மட்டுமே எங்கள் குறிக்கோள்’’ என்று கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.