நாளை (அக்டோபர் 30) பூமியை வலுவான புவி காந்த புயல் பூமியைத் தாக்கக் கூடும் என எச்சரித்துள்ளது அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration). இந்த ஜி3 (ஸ்ட்ராங்) புவி காந்த புயல் 2887 பகுதியில் ஏற்பட்டுள்ள Coronal Mass Ejection-இன் விளைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

image

50 டிகிரி புவி காந்த அட்சரேகையின் துருவமுனையில் இதன் தாக்கம் உணரப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம்பர்க், ஜெர்மனி, செக் குடியரசு, போலாந்து, உக்ரைன், ரஷ்யா, கஜகஸ்தான், மங்கோலியா, சீனா, கனடா, இங்கிலாந்து மாதிரியான நாடுகளின் பகுதிகள் இந்த 50 டிகிரி புவி காந்த அட்சரேகையின் துருவமுனையின் கீழ் வருகின்றன. 

இந்த புயலால் பவர் சிஸ்டத்தில் சில பாதிப்புகள் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலையற்ற வோல்டேஜ் சிக்கல், பாதுகாப்பு கருவிகளில் தவறான எச்சரிக்கை ஒலி எழவும் வாய்ப்புயல் உள்ளதாம். விண்கலத்திலும் இந்த புவி காந்த புயல் சில தாக்கங்களை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

31-ஆம் தேதியன்று மிதமான ஜி2 புவி காந்த புயல் தாக்கம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.