இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியுடனான போட்டியில் களமிறங்கும் பாகிஸ்தான் அணி குறித்து பார்க்கலாம்.

மூன்று வகையான போட்டிகளிலும் நேர்த்தியாக ரன்கள் சேகரிக்க கூடிய பாபர் ஆசம் தலைமையில் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது. இவரது ஆட்டம் தான் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். சுழற்பந்து வீச்சாளரும் மத்திய வரிசையில் ரன்குவிக்கும் ஆற்றல் படைத்தவருமான ஷதாப் கான் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அதிரடி ஆட்டக்காரர் ஃபக்கர் ஸமான், பாபர் ஆசமுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

ஃபகர் ஸமான் உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக விளையாடிய தெம்புடன் உலகக்கோப்பை போட்டியில் களமிறங்குகிறார். அசிப் அலி, ஹைதர் அலி, சோயப் மசுத் ஆகியோர் மத்திய வரிசைக்கு வலுசேர்க்கின்றனர். சர்ஃபராஸ் அஹமது,முஹமது ரிஸ்வான் என இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர். அனுபவ வீரர்களான சோயப் மலிக், இமாத் வாசிம், முஹமது ஹஃபீஸ் ஆகியோருடன் முஹமது நவாஸ், முஹமது வாசிம் ஆகிய ஆல்ரவுண்டர்கள் அந்த அணியில் நிரம்பியுள்ளனர்.

image

ஷாஹீன் ஷா அப்ரிதி, ஹாரிஸ் ரவுஃப் ஹசன் அலி ஆகியோரின் வேகப்பந்து வீச்சு அந்த அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருபது ஓவர் போட்டிகளுக்கான தரநிலையில் இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணி மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

இதனைப்படிக்க…“மக்களுக்கு தொல்லை தருவதில் மோடி அரசு புதிய சாதனை” – பிரியங்கா காந்தி விமர்சனம் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.