மத்திய, மாநில அரசுகளின் வரிகளைக் கழித்தால் பெட்ரோல் ஒரு லிட்டர் 66ஆகவும், டீசல் 55 ரூபாயாகவும் இருக்கும். ஆனால், 2014ல் இருந்ததைவிட கச்சா எண்ணெய் விலை தற்போது குறைவாக நீடிக்கும் நிலையிலும், பெட்ரோல் 102 ரூபாயை தாண்டியும், டீசல் 100 ரூபாயை எட்டியும் விற்கப்படுகிறது.

2014ல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 74 ரூபாயில் மத்திய அரசின் வரி 10 ஆகவும் மாநில அரசின் வரி 12 ரூபாயாகவும் டீலர் கமிஷன் 2 ரூபாயாகவும் இருந்தது. இவை போக, பெட்ரோலின் அசல் விலை 49 ரூபாய். அதுவே இப்போது வரிகளுக்கு முன் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோலின் அசல் விலை 42 ஆக, அதாவது 7 ரூபாய் குறைவாக உள்ள நிலையில், மத்திய அரசின் வரி 33 ரூபாயாகவும், மாநில அரசின் வரி 24 ரூபாயாகவும் இருக்கிறது. டீலர் கமிஷன் 4 ரூபாய் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோல் 102ஐ தாண்டி விற்பனையாகிறது.

தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் ரூ.102ஐ தாண்டிய பெட்ரோல் விலை.. போபாலில்  ரூ.110க்கு பெட்ரோல் விற்பனை | Tamilnadu: 1-liter Petrol sells for more than  102 Rs in 34 districts ...

இதே நிலைதான், டீசல் விஷயத்திலும். 2014ல் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் ஒரு லிட்டர் டீசல் 45 ரூபாயாக இருந்த நிலையில், மத்திய அரசு வரி 5 ரூபாய், மாநில அரசின் வரி 7 ரூபாய், டீலர் கமிஷன் 1 ரூபாய் சேர்த்து 58 ரூபாயாக ஆக இருந்தது. அதுவே, தற்போது டீசலின் அடிப்படை விலை 43 ஆக, அதாவது 2 ரூபாய் குறைவாக இருந்தும் மத்திய அரசின் வரி 32 ரூபாய் மாநில அரசின் வரி 13 ரூபாய் டீலர் கமிஷன் 3 ரூபாய் சேர்ந்து 100ஐ நெருங்கி விற்கப்படுகிறது.

மத்திய, மாநில அரசுகளின் வரிகள் இல்லாவிட்டால், தற்போதும் ஒரு லிட்டர் பெட்ரோல் 66 ரூபாயாகவும் டீசல் 55 ரூபாயாகவும் இருக்க வாய்ப்புள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பில் 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது மத்திய அரசுக்கு 164 சதவிகிதம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. 2014-15ஆம் நிதியாண்டில் 1.7 லட்சம் கோடியாக இருந்த வருவாய், தற்போது 4.6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

Petrol Price Today | இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..உங்க ஊரில்  எவ்வளவு?

மத்திய, மாநில அரசுகளின் கற்பகவிருட்சமாக பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி இருப்பது, கட்டமைப்பு பணிகள், மக்கள்நல திட்டங்களுக்கு நிதியாக பயன்படுத்தப்படுவதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. எனினும், சர்வதேச சந்தை விலைக்கே பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்வதை கொள்கை முடிவாக எடுத்த அரசு, வரிகளைக் குறைத்து விலை குறையச் செய்ய வேண்டும் என்பதே பரவலான கருத்தாக உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.