ஸ்மார்ட்போன்களை தயாரித்து வரும் நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் பயனர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் சுழற்சி முறையில் தங்கள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை சந்தையில் அறிமுகம் செய்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் அடுத்த சில நாட்களில் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாக உள்ள கூகுள் பிக்சல் 6 முதல் ஆசஸ் 8Z வரையிலான ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம். 

image

மோட்டோரோலா எட்ஜ் S!

விரைவில் அறிமுகமாக உள்ள எட்ஜ் S போனில் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உள்ளது. 12ஜிபி ரேம், 256ஜிபி இன்டர்னல் மெமரி, 108 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 25 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா, 6.7 இன்ச் பன்ச் ஹோல் டிஸ்பிளே, 5000 mAh பேட்டரி மாதிரியானவற்றை கொண்டுள்ளது இந்த போன். 

image

கூகுள் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 புரோ!

2021-இல் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 புரோ என இரண்டு போன்களை அறிமுகம் செய்கிறது கூகுள் நிறுவனம். கூகுளின் இன்-ஹவுஸ் தயாரிப்பான டென்சர் சிப்செட்டை கொண்டுள்ளன இந்த இரண்டு போன்களும். கேமராவில் டெலிபோட்டோ ஜூம் லென்ஸ் (4x) உட்பட சில மாற்றங்களை இந்த போனில் மேற்கொண்டுள்ளது கூகுள். வரும் 19-ஆம் தேதி கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், தைவான், ஜப்பான், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து என 8 நாடுகளில் முதற்கட்டமாக விற்பனைக்கு அறிமுகமாக உள்ளன. 

image

சாம்சங் கேலக்ஸி S21 FE! 

நீண்ட வதந்திக்கு பின்னதாக எதிர்வரும் சாம்சங் கேலக்ஸி Unpacked ஈவெண்டில் சாம்சங் கேலக்ஸி S21 FE ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.4 இன்ச் AMOLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 8ஜிபி ரேம், பாஸ்ட் சார்ஜிங் வசதிகளை இந்த போன் கொண்டுள்ளதாம். இருப்பினும் தற்போது நிலவும் சிப் தட்டுப்பாட்டால் இதன் சந்தை அறிமுகம் ஜனவரி வரை தள்ளிப் போகக் கூடும் எனவும் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 

image

ஆசஸ் 8Z!

ஆசஸ் நிறுவனத்தின் சென்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாகிவிட்டன. இருந்து கொரோனா தொற்று பரவல் ஏற்படுத்தியுள்ள சிக்கலால் இந்த போனை ஆசஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யாமல் உள்ளது. இந்நிலையில் ஆசஸ் 8Z போனை அந்த நிறுவனம் அறிமுகம் செய்கிறது. அதிகாரப்பூர்வமாக அதற்கான நாளை ஆசஸ் அறிவிக்கப்படாமல் உள்ளது. ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 16ஜிபி ரேம், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை இந்த போன் கொண்டிருக்கலாம் என்ற தகவல் இப்போது கசிந்துள்ளது. 

இந்த போன்களில் சில இந்தியாவில் இப்போதைக்கு அறிமுகமாகாது என சொல்லப்பட்டுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.