உலகிலேயே மிகப்பெரிய ராணுவ சக்தியாக நம் நாட்டை மாற்றுவதே தற்சார்பு இந்தியா திட்டத்தின் நோக்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அரசுக்கு சொந்தமான 7 புதிய ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களை காணொளி முறையில் நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் இவ்வாறு பேசினார். ராணுவ தளவாட உற்பத்தி வாரியத்தின் கீழ் இயங்கி வந்த தளவாட தயாரிப்பு பணிகள் இனி அரசுக்கு சொந்தமான வணிக ரீதியான 7 தொழில் நிறுவனங்களின் கீழ் நடைபெற உள்ளது.

இதற்காக உருவாக்கப்பட்டுள்ள 7 புதிய நிறுவனங்களை விஜயதசமி நாளில் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது பேசிய அவர்… அப்துல் கலாமின் 90ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு அஞ்சலியும் செலுத்தினார். அரசு தொடங்கியுள்ள 7 புதிய நிறுவனங்கள் கலாமின் கனவுகளை நனவாக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

image

இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குத்துவிளக்கேற்றி வேத மந்திரங்கள் ஒலிக்க, சமய வழிபாடுகளுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சியிலுள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களும் காணொளி முறையில் பங்கேற்றனர்.

கலைக்கப்பட்ட ராணுவ படைக்கலன் வாரியத்தில் பணியாற்றியவர்களின் பணி வாய்ப்பும் புதிய நிறுவனங்களால் பாதிக்கப்படாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.