கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் (மகளின் கணவர்) முஹம்மது ரியாஸ் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார். கடந்த 7-ம் தேதி சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் முஹம்மது ரியாஸ், “எம்.எல்.ஏ-க்களின் பரிந்துரையுடன் ஒப்பந்ததாரகள் அமைச்சர்களை பார்க்க வரக்கூடாது. அல்லது எம்.எல்.ஏ-க்கள், ஒப்பந்ததாரர்களை அழைத்துக்கொண்டு அமைச்சர்களை சந்திக்க வரக்கூடாது. அப்படி வருவது எதிர்காலத்தில் பல தீங்குகளுக்கு வழிவகுக்கும்” எனக் கூறியிருந்தார். இது ஆளும் சி.பி.எம் கட்சி எம்.எல்.ஏ-க்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

மேலும் சி.பி.எம் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரான கடகம்பள்ளி சுரேந்திரன் உள்ளிட்ட சில எம்.எல்.ஏ-க்கள் முஹம்மது ரியாஸின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த பேச்சை விமர்ச்சித்தும் பேசியுள்ளனர்.

சி.பி.எம் கேரள மாநில செயலாளர் விஜயராகவன்

“அமைச்சர் முஹம்மது ரியாஸின் பேச்சு மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ-க்கள் குறித்து மக்கள் மத்தியில் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. தொகுதியில் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் விதமாக ஒப்பந்ததாரர்களை சந்திக்க வேண்டிய நிலை எம்.எல்.ஏ-க்களுக்கு ஏற்படும். சில நேரங்களில் அவர்களுடன் அமைச்சர்களை பார்க்க வேண்டிய நிலையும் ஏற்படும். இதை தவறாக சித்திரித்து, சட்டசபை போலுள்ள பொது இடத்தில் அமைச்சர் பேசியிருக்க வேண்டியது இல்லை” என அமைச்சர் முஹம்மது ரியாஸை விமர்ச்சித்திருந்தார்கள் எம்.எல்.ஏ-க்கள்.

Also Read: மறைந்த மலையாள நடிகர் நெடுமுடி வேணு உடல் தகனம்… முதல்வர் பினராயி விஜயன் அஞ்சலி!

எம்.எல்.ஏ-க்கள் விமர்சனத்துக்கு பிறகும் அசைந்து கொடுக்காத முஹம்மது ரியாஸ் தான் பேசிய கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். பேசிய கருத்தில் இருந்து ஒரு அடிகூட பின்னால் எடுத்து வைக்கமாட்டேன் எனக் கூறியிருந்தார் அமைச்சர் முஹம்மது ரியாஸ். இந்த நிலையில் அமைச்சர் முஹம்மது ரியாஸின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சி.பி.எம் கட்சியின் கேரள மாநில செயலாளர் விஜயராகவன்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் – மருமகன் அமைச்சர் முகம்மது ரியாஸ்

இதுபற்றி கருத்து தெரிவித்த விஜயராகவன், “அமைச்சர் முஹம்மது ரியாஸ் கூறியிருப்பது கட்சி மற்றும் கூட்டணியின் பொதுவான அணுகுமுறைதான். பொதுவான நிலைப்பாட்டைத்தான் அமைச்சர் பேசியிருக்கிறார். அரசும், அமைச்சர்களின் அலுவலகங்களும் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றிய தெளிவான அணுகுமுறை சி.பி.எம் கட்சிக்கு உண்டு. பரிந்துரைகள் இல்லாமலே விஷயங்கள் வேகமாக நடைபெற வேண்டும் என்பதே சி.பி.எம் கட்சியின் அணுகுமுறை. அரசு அதற்கு சாத்தியமான எல்லாவற்றையும் செய்யும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.