Press "Enter" to skip to content

பெட்ரோல், டீசல் விலை 7ஆவது நாளாக உயர்வு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7ஆவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை உயர்ந்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் எரிபொருட்களின் விலை 7ஆவது நாளாக தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 26 காசு உயர்ந்து, 101 ரூபாய் 79 காசுக்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 33 காசு அதிகரித்து 97 ரூபாய் 59 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

“என் தந்தை மக்களுக்காக உழைத்தது போதும்” – விஜய பிரபாகரன் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM