டெல்லி அணிக்கெதிரான போட்டியில் தனது வழக்கமான பாணியில் தோனி பினிஷிங் செய்த நிலையில், அவருடைய மனைவி சாக்‌ஷி, மகிழ்ச்சியில் கண்கலங்கிய வீடியோ காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
 
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ப்ளே-ஆப் ஆட்டத்தில் மிரட்டலான பேட்டிங் மூலம் வெற்றி பெறச் செய்திருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. சென்னை அணி வெற்றிபெற, 11 பந்துகளில் 24 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் களமிறங்கிய தோனி, 1 சிக்ஸர், 3 பவுண்டரி உள்பட 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன்மூலம் சிஎஸ்கே அணி, ஐபிஎல் அரங்கில் 9வது முறையாக இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
 
image
நீண்ட நாட்களுக்குப் பிறகு தோனியின் ஃபினிஷிங் இன்னிங்ஸை பார்த்து ரசிகர்கள் உச்சத்தில் கொண்டாடி வருகின்றனர். நேற்றையப் போட்டியின்போது வின்னிங் ஷாட் அடித்ததும் தோனியின் ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் மல்க பார்த்து ரசித்தனர். தோனி மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பிவிட்டதை நெகிழ்ச்சியுடன் ரசிகர்கள் கொண்டாடினர். ரசிகர்கள் மட்டுமல்ல, மைதானத்தில் இருந்து போட்டியைக் கண்ட தோனியின் மனைவி சாக்‌ஷியும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். வின்னிங் ஷாட் அடித்து வெற்றியை உறுதி செய்ததும் அருகில் இருந்த மகள் ஜுவாவை கட்டியணைத்து, ஆனந்த கண்ணீர் வடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் அவர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
tweet embed
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.