வழக்கமாக தமிழ் சினிமாக்களில் மட்டுமே கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாத வசனங்கள் கதாநாயகர்கள் பேசுவார்கள். ‘நாங்கல்லாம் சுனாமியிலேயே ஸ்விம்மிங்க போட்டவங்க’ என்பது அதற்கு ஒரு உதாரணம். ஆனால் நிஜத்தில் அப்படி ஒரு நிகழ்வு தற்போது தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளது. 

image

அந்த நாட்டில் உள்ள ‘சாவோ பிரயா’ ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள நகரங்கள், கிராமங்கள் மற்றும் வணிக ஸ்தாபனங்கள் செய்வதறியாது தவித்து வருகின்றன. குறிப்பாக ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள உணவகங்களும் வெள்ளத்தினால் மூடப்பட்டுள்ளன. ஆனால் நோந்தபுரி மாகாணத்தில் இயங்கி வரும் Chaopraya Antique Café-வின் உரிமையாளர் கொஞ்சம் மாற்றி யோசித்தார். 

ஏற்கனவே கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டிருந்த தொழிலை வெள்ளம் காரணமாக மேலும் பாதிக்க செய்ய அவர் விரும்பவில்லை. அதனால் வழக்கம் போலவே உணவகத்தை இயக்கினார். உணவகத்தில் மேசைகள் வீற்றிருக்கும் பகுதி முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டிருந்தது. அவ்வபோது சிறிய அளவில் அலைகளும் ஆற்று நீரில் அடித்துக் கொண்டிருந்தது. அதை அவர் கண்டும் காணாமல் தொழிலை நடத்தினார். 

image

வாடிக்கையாளர்களுக்கு வெள்ள நீர் சூழப்பட்டது புதிய அனுபவத்தை கொடுக்க, உணவகத்தில் உணவு சாப்பிட பலரும் ஆர்வம் காட்டினர். 

மணிக்கணக்கில் அந்த உணவகத்தில் உணவு சாப்பிட மக்கள் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளதாம். தற்போது அது குறித்த தகவல்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.