அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாநிலத்தின் Burke நகரம் மற்றும் கனடாவின் Quebec மாகாணத்தையும் இணைக்கின்ற ஜேமிசன் லைன் எல்லை பகுதியில் திருமண விழா ஒன்று நடைபெற்றுள்ளது. மணமகள் கரேன் மஹோனி (Karen Mahoney) மற்றும் மணமகன் பிரையன் ரே (Brian Ray) தங்கள் மணவிழாவை எல்லை பகுதியில் நடத்த முடிவு செய்ததற்கு பின்னதாக ஒரு காரணமும் உள்ளது. 

image

மணமக்கள் இருவரும் பால்ய நண்பர்கள். அண்மையில் திருமண பந்தத்தில் இணைய முடிவு செய்தனர். அதன்படி செப்டம்பர் 25-ஆம் தேதியன்று தங்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். ஆனால் அதற்கு சில நாட்களுக்கு முன்பே கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனடா – அமெரிக்க எல்லை மூடப்பட்டிருக்கும் செய்தியை அறிந்து கொண்டுள்ளனர். 

எல்லை பகுதி மூடப்பட்டிருந்ததால் மணமகள் கரேன் குடும்பத்தினர் திருமண விழாவில் பங்கேற்பதில் சிக்கல் நிலவியது. கரேன் கனடாவை சேர்ந்தவர். தற்போது அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் வசித்து வருகிறார். 

அதற்கு தீர்வு காணும் நோக்கில் திருமணத்தை எல்லை பகுதியில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி அதற்கான ஏற்பாடுகளை கரேனின் நண்பர் கவனித்துள்ளார். இவர் எல்லை பகுதியில் இது மாதிரியான நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் வல்லவராம். 

image 

அதன்படி திருமண விழா எல்லை பகுதியில் நடந்துள்ளது. இரு வீட்டாரும் அதில் பங்கேற்றுள்ளனர். மணமகள் கரேனின் குடும்பத்தினர் கனடா எல்லையில் இருந்த படி வாழ்த்தியுள்ளனர். 

“எல்லை மூடப்பட்டிருந்ததால் எங்கள் திருமணத்தில் எனது 96 வயது பாட்டி கலந்து கொள்ளாத சூழல் இருந்தது. அதனால் நான் கவலை கொண்டிருந்தேன். இறுதியில் எங்கள் திருமணமே குடும்பத்தினரின் வரவுக்காக அந்த எல்லைப் பகுதியில் நடந்தது ஸ்பெஷல்” என தெரிவித்துள்ளார் கரேன். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.