உலகளாவிய அளவில் இக்கட்டான சூழ்நிலையைக் கோவிட் ஏற்படுத்தி இருந்தாலும், இதே காலகட்டத்தில் பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 2.58 கோடி புது முதலீட்டாளர்கள் சந்தையில் காலடி எடுத்து வைத்துள்ளனர். தற்போது முதலீட்டில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்களின் அளவு சுமார் 8.05 கோடியாகும்!

பங்குச் சந்தை வர்த்தகத்தில் 38 ஆண்டு கால அனுபவமிக்க பொருளாதார நிபுணர் மற்றும் ஈக்வினாமிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் G. சொக்கலிங்கம் பங்குச் சந்தை குறித்த பல தகவல்களை வழங்குகிறார்.

இப்போது முதலீடு செய்வது பாதுகாப்பானதா?

மார்ச், 2020-ல் சந்தை மதிப்பு ரூ. 102 லட்சம் கோடியாகும், தற்போது ரூ. 261 லட்சம் கோடியாக இருக்கின்றது. இது 156% வளர்ச்சியாகும். முதலீடு செய்ய இது நல்ல நேரம்தான், ஆனால் ஒரு நிறுவனத்தின் மதிப்பீட்டை வைத்து முதலீடு செய்யத் தீர்மானியுங்கள்!

தற்போதைய முதலீட்டாளர்களுக்கு ஏற்ற பங்குத் துறைகள் என்ன?

அனைத்து துறைகளின் மதிப்பீடுகளும் பல மாற்றங்களைச் சந்தித்துள்ளன. ஒருவேளை சந்தை சரிகிறது என்றால், லிக்விடிட்டிக்காக, அதாவது பங்குகளை உடனடியாக விற்க வேண்டிய பட்சத்தில் 50% முதலீட்டை மியூச்சுவல் ஃபண்ட் போன்ற இன்ஸ்டிட்யூஷனல் ஸ்டாக்குகளில் முதலீடு செய்யலாம். டாப் 250 நிறுவனப் பங்குகளை இந்த வகையில் சேர்க்கலாம். பங்குச் சந்தை முதலீட்டில் அதிகளவு ரிஸ்க் எடுக்க நினைக்காதவர்கள், தங்களின் பணத்தை 70% வரை இவற்றில் முதலீடு செய்யலாம். நடுத்தர மற்றும் நீண்ட கால லாபத்தைப் பெறுவதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும். ஸ்மால் மற்றும் மிட் கேப் (SMC) நிறுவனப் பங்குகளைக் காட்டிலும் இவை ஓரளவு பாதுகாப்பானவையாகும். மீதி 30% – 50% முதலீட்டை உங்களின் ரிஸ்க்கைத் தாங்கும் திறன் பொறுத்து ஸ்மால் மற்றும் மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்யலாம்! இவற்றில் முதலீடு செய்யும்போது பிரத்தியேக நிறுவனப் பங்குகள் (Individual Stocks) அணுகுமுறையைப் பின்பற்றலாம்!

புது முதலீட்டாளர்களுக்கு அறிவுரை.

ஸ்மால் மற்றும் மிட் கேப் பங்குகளில் முதலீடு செய்யும்போது கவனம் தேவை. முந்தைய காலங்களில் பலரின் முதலீடு அவர்களின் கைவிட்டு போனதற்கு இவை காரணமாக இருந்துள்ளன. ஒரு நிறுவனத்தின் பேலன்ஸ் ஷீட், நிர்வாகத்தின் தரம் மற்றும் பிற மதிப்பீடுகளை மையமாகக் கொண்டே முதலீடுகளைச் செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் அதிக லாபம் தருகிறது எனும் பார்வை நீண்ட நாள் நீடிப்பதில்லை…

இந்தியச் சந்தையின் அடுத்தகட்டம் என்ன?

அடுத்த 3 முதல் 6 மாதத்துக்கு சந்தை சரிய வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. புதிய முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தற்போது அதிகரித்து வருகின்றன. பொருளாதாரத்தைச் சீர்ப்படுத்தும் முக்கிய காரணிகள் தற்போது வளர்ச்சியடைந்து வருகின்றன. 4-6 மாதங்களுக்குப் பிறகே சந்தையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. உலகளவில், 23 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கான வர்த்தக/பொருளாதார வாய்ப்புகள் உருவாகியுள்ளன. உலக அரசியல் சூழ்நிலைகளும் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதால், நீண்டகாலப் போக்கில் வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கிறன்றன.

கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டாம்!

தற்போதைய சூழ்நிலையில் கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தவிருங்கள். மாற்றாக பிற பங்குகளில் கிடைத்த லாபத்தை மறுமுதலீடு செய்யலாம். இதனால் கடன் சுமை குறையும். பங்குச் சந்தை குறித்து சரியான புரிந்துகொள்ளல் இல்லாமல், இலவசமாகக் கிடைக்கும் ஸ்டாக் தொடர்பான செய்திகளை நம்பி வர்த்தகத்தில் இறங்காதீர்கள்!

ஈக்வினாமிக்ஸ் வழங்கும் சேவைகள்.

கடந்த 7 வருடங்களாக பொருளாதார அடிப்படையில் பங்குச் சந்தையின் போக்கு குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது ஈக்வினாமிக்ஸ் ரிசர்ச் அண்டு அட்வைசரி பி. லிட். (Equinomics Research and Advisory Pvt. Ltd.). ஆதித்யா பிர்லா மணி லிட். நிறுவனத்தின் சார்பாக, ஈக்வினாமிக்ஸ் பங்குச்சந்தை புரோக்கிங்கிலும் ஈடுபட்டு வருகிறது. ஈக்வினாமிக்ஸ் நிறுவனர் G. சொக்கலிங்கம், ENAM குரூப், பார்க்லேஸ் வெல்த், சென்டிரம் வெல்த், DSJ குரூப் உள்ளிட்ட பல நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியவர் ஆவார்.

செபி (SEBI)-யால் அங்கீகரிக்கப்பட்ட பங்குகள் தொடர்பான ஆராய்ச்சி நிறுவனமாக (Reg No: INH000007863) விளங்கும் ஈக்வினாமிக்ஸ், www.equinomics.co.in என்ற தளம் மூலம் சில்லறை முதலீட்டாளர்களுக்குத் தேவையான பங்குச் சந்தை குறித்த அறிவுரைகளை வழங்கி வருகிறது. நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்து நிதியைப் பெருக்கிட உதவும் ஈக்வினாமிக்ஸின் சேவைகளை, ரூ. 3000 செலுத்தி நீங்களும் பெற்றிடலாம். அணுகவும்: www.equinomics.co.in

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.