நாட்டு மக்கள் அனைவருக்கும் அவரவர் மருத்துவ தகவல்கள் அடங்கிய பிரத்யேக அடையாள எண் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைக்கிறார்.

மின்னணு மருத்துவ திட்டம் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என கடந்த ஆண்டின் சுதந்திர தின உரையில் பிரதமர் தெரிவித்திருந்தார். தற்போது சோதனை முயற்சியாக 6 யூனியன் பிரதேசங்களில் மின்னணு மருத்துவ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அது இனி நாடு முழுக்க விஸ்தரிக்கப்பட உள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இன்றைய தினம் இந்திய மருத்துவ துறையில் புதிய அத்தியாயம் எழுதப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். நவீன மின்னணு தொழில்நுட்பங்கள் வாயிலாக மருத்துவ சேவைகளை மக்கள் எளிதாக பெற வழிவகுப்பதே மின்னணு மருத்துவ திட்டம் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

अब लोगों के पास होगी हेल्थ आईडी, पीएम मोदी कल करेंगे आयुष्मान भारत डिजिटल  मिशन की शुरुआत - PM Narendra Modi to launch Ayushman Bharat Digital Mission  on 27th September NTC - AajTak

மருத்துவ அடையாள அட்டை திட்டத்தின் கீழ் தனிநபரின் மருத்துவ வரலாற்றை ரகசியத்தன்மை பாதுகாப்புடன், மருத்துவ சேவைக்கான கட்டமைப்பு வசதிகள், தகவல்களை பெற முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்கப்படுவதுடன் செல்ஃபோன் செயலி மூலம் மருத்துவ சேவைகளை எளிதாகப் பெற வழி ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.