தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேட்புமனுக்கள் செப்டம்பர் 25-ம் தேதி வாபஸ் வாங்கப்பட்டது. கள்ளக்குற்ச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 3,773 உள்ளாட்சி பதவிகளுக்கு பெறப்பட்ட 13,957 மனுக்களில் 224 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதேபோல 2,530 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டதால், 487 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தனர் அதிகாரிகள். ஆனால் பொய்க் காரணங்களால் தங்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன என்றும் வாபஸ் பெறாதவர்களையும் கட்டாயமாக வாபஸ் பெற்றதாக அதிகாரிகள் அறிவித்துவிட்டார்கள் என்று போர்க்கொடி தூக்கினார்கள் அ.தி.மு.கவினர். கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 11-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அலமேலு ஆறுமுகம் என்பவர் தி.மு.க சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

Also Read: `சசிகலாவுடன் ரகசிய பேச்சுவார்த்தை முதல் புதுச்சேரி தலைவரை மிரட்டிய டெல்லி வரை’ – கழுகார் அப்டேட்ஸ்

அதிமுக ஒன்றிய செயலாளர்

அவரை எதிர்த்துப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அனைவரும் வாபஸ் பெற்றதாக தெரிவித்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாமிதுரை, தி.மு.க வேட்பாளர் அலமேலு ஆறுமுகம் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவித்து  அவருக்கு சான்றிதழை வழங்கினார். ஆனால் ”அ.தி.மு.க வேட்பாளர் வாபஸ் பெறாதபோது தி.மு.க போட்டியின்றி வெற்றி பெற்றதாக எப்படி அறிவிக்கலாம் ?” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி அ.தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் திடீரென போலீஸாரின் கட்டுப்படுகளையும் மீறி தேர்தல் நடத்தும் அலுவலரான சாமிதுரையின் கண்ணத்தில் பளார் என அறைந்தார். அதனால் அந்த இடத்தில் பதற்றமான சூழல் நிலவியதையடுத்து போலீஸார் ராஜசேகரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.