எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின். நீண்ட நாட்களுக்கு பிறகு இதன் மூலம் சர்வதேச ஷார்டர் பார்மெட் கிரிக்கெட்டுக்கு கம்பேக் கொடுத்துள்ளார் அவர். இந்நிலையில் அவரது பந்துவீச்சு வேரியேஷன் பரிசோதனைகள் குறித்து விமர்சித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். 

image

“அஸ்வின் ஒரு மைண்ட்செட்டுக்குள் இருப்பதால் தான் ஆப்-ஸ்பின்னரான அவர் தனது பந்துவீச்சில் நிறைய வேரியேஷன்களை பரிசோதனை முயற்சியாக செய்து பார்க்கிறார். ஆப்-ஸ்பின் வீசினால் தனது பந்தை பவுண்டரிக்கு பேட்ஸ்மேன்கள் விளாசி விடுவார்கள் என்ற பயத்தினால் இதை செய்கிறார். ஆனால் தோனி விக்கெட் கீப்பிங் செய்த காலங்களில் அஸ்வினை இந்த மாதிரியான வேரியேஷன்களை சோதித்து பார்க்க அவர் அனுமதித்தது கிடையாது. சிக்ஸ் அடிக்க முயற்சிக்கும் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தவும் முடியும் என்ற நிதர்சனத்தை சில நேரங்களில் பவுலர்களுக்கு உணர்த்த வேண்டி உள்ளது. 

image

தற்போது அஸ்வின் பந்து வீசும் விதம் விக்கெட்டுகளை கைப்பற்ற பெரிய அளவுக்கு உதவாது. அவர் மீண்டும் பழையபடி ஆப்-ஸ்பின் வீசினால் நிச்சயம் விக்கெட்டுகளை வீழ்த்துவார். அது மிடில் ஓவர்களில் அணிக்கு பெரிய அளவில் கைகொடுக்கும்” என சேவாக் தெரிவித்துள்ளார். 

நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின், ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2.5 ஓவர்கள் வீசி 22 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். இதில் விக்கெட் ஏதும் அவர் வீழத்தவில்லை. 

இதையும் படிக்கலாம் : ‘ஆப்’ இன்றி அமையா உலகு 2: ஆல் இந்திய ரேடியோ – தமிழ் வானொலி நேயர்கள் கவனத்துக்கு..! 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.