நாட்டில் புதுடெல்லிக்கு அடுத்த மிகப்பெரிய விமான நிலையமாக இருப்பது மும்பை விமான நிலையம் ஆகும். மும்பை விமான நிலையம் எப்போதும் மிகவும் பிஸியாகவே இருக்கும். விமான நிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான குடிசைகள் இருக்கிறது. இக்குடிசைகளிடமிருந்து விமான நிலையத்தை பிரிக்கத் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு இருக்கிறது. அடிக்கடி இந்த குடிசைப்பகுதியில் இருந்து விமான நிலையத்திற்குள் நாய்கள் வந்துவிடுவதுண்டு.

மும்பை விமான நிலையம்(கோப்பு காட்சி)

Also Read: மும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்!

இதனால் தடுப்புச் சுவரைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மும்பை விமான நிலையத்தின் ஓடுதளம் இருக்கும் பகுதிக்குள் மர்ம பொருள் குடிசைப்பகுதியில் இருந்து பறந்து வந்து விழுந்தது. இதனை கவனித்த பாதுகாப்பு படை வீரர் இது குறித்து விமான நிலையத்தின் மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்குத் தகவல் கொடுத்தார். வெடிகுண்டு நிபுணர்களுடன் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து அதனை சோதித்தபோது பாட்டில் ஒன்றில் பெட்ரோல் நிரப்பப்பட்டு விமான நிலையத்திற்குள் வீசப்பட்டு இருந்தது. எதாவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விமானத்தின் மீது இந்த பாட்டில் விழுந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும். இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் உடனே விமான நிலையத்தையொட்டி இருக்கும் குடிசைகளில் இது குறித்து விசாரித்தனர். ஆனால் அதனை யார் எறிந்தனர் என்பது குறித்த விபரம் கிடைக்கவில்லை. தீவிரவாதிகள் யாராவது இக்காரியத்தில் ஈடுபட்டனரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை விமான நிலையத்தின் பராமரிப்பு நிர்வாகம் சமீபத்தில் தான் குஜராத்தை தலைமையிடமாகக் கொண்ட அதானி குழுமத்தின் வசம் சென்றது.

மும்பை விமான நிலையத்தையொட்டி இருக்கும் குடிசைகளை அகற்றிவிட்டு அதில் வசிப்பவர்களுக்கு வேறு இடத்தில் வீடு கொடுக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் கொடுக்கப்படும் வீடு அருகிலேயே இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அருகில் வீடு கொடுக்க முடியாது என்று அரசு அறிவித்துள்ளது. எனவே குடிசைகள் கணக்கெடுப்பு பணியைக்கூட குடிசைவாசிகள் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். இதற்கு உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவு இருப்பதால் மும்பை விமான நிலைய நிர்வாகத்தால் எதுவும் செய்ய முடியாத நிலை இருக்கிறது. மாநில அரசும் இதில் அவசரப்பட்டு முடிவு எடுக்க மறுத்து வருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.