வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் டி20 தொடரில் 14 ஆயிரம் ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

செயிண்ட் லூசியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 4 பவுண்டரி 7 சிக்சர்கள் என 38 பந்துகளில் 67 ரன்கள் விளாசி அசத்தினார் கிறிஸ் கெயில். இந்த வெற்றியின் மூலம் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்றுள்ளது.

41 வயதாகும் கிறிஸ் கெயில் இந்தப் போட்டியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இதனை தன்னுடைய 431 ஆவது டி20 போட்டியில் செய்திருக்கிறார்.

image

இவருக்கு அடுத்த இடத்தில் கெய்ரன் போலார்டு 10,836 ரன்களுடனும், 3-ஆம் இடத்தில் ஷோயப் மாலிக் 10,741 ரன்களுடனும், 4-ஆம் இடத்தில் டேவிட் வார்னர் 10017 ரன்களுடனும், 5-ஆம் இடத்தில் விராட் கோலி 9,922 ரன்களுடனும் இருக்கின்றனர், பிஞ்ச் (9,728), ஏபி டிவில்லியர்ஸ் (9,318) என்று அடுத்தடுத்த நிலையில் இருக்கின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.