பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

(வாக்கிங்…. இளமைக்கும் முதுமைக்கும் இடையேயான பலம்!! புதுமைக்கும் பழமைக்கும் இடையேயான பாலம் புத்தாண்டு சபதங்களில் ஒன்றான வாக்கிங் பற்றிய ஜாலியான தொடர்… புதுமையும் உண்டு.. நாஸ்டால்ஜியாவும் உண்டு)

முதல் பாகம் : “தமிழய்யா சொன்ன ஆங்கில வார்த்தைப் புதிர்..!” – வாக்கிங் டாக்கிங் – 1 #MyVikatan

இரண்டாம் பாகம் : திருமதியின் எசப்பாட்டு! – வாக்கிங் டாக்கிங் 2 #MyVikatan

மூன்றாம் பாகம் : “ஓஹோ.. இதான் பவுடர் கலையாத நடையா.. !‘’- வாக்கிங் டாக்கிங் – 3

நான்காம் பாகம் : ஒரே ஒரு கேள்வி.. மொத்தமா நான் காலி..!

***

இனியவன் வரும்போதே, மழை லேசாக தூறிக்கொண்டு இருந்தது. நான் எதிர்பார்த்த நேரத்தைவிடவும் முன்னதாக வந்தார். அதனால் நேரமானாலும் லேட்டாக வந்தார் என்று சொல்ல முடியாது.

ஏன் லேட்? க்கு “லேட்டாயிடுச்சு” என உடனே பதில் வரும் அல்லது உண்மையான பதில் லேட்டாக தான் வரும்! அல்லது வராது போகும்.

அவரே ஆரம்பித்தார்.

ஏன் லேட்டுன்னு பார்க்கிறீங்களா? வாக்கிங் போகலாமுன்னு நினைச்சுட்டே படுத்துட்டுருக்குமே… அது தான் சராசரி வாழ்க்கை! அது தான் சுகம்!

இல்ல… இல்ல…

நான் வராதற்கு முன்னே நீங்க ரெடியான நான் லேட்டாதான் தெரிவேன்…

அவர் சொல்வது ஒரு விதத்தில் சரியாகத்தான் இருந்தது. இரண்டு பேரும் லேட்டானா, எப்படி லேட்டாகும்?

என் மனசுல இருக்கிறதை எப்படி கண்டுப்பிடிச்சுங்க…

யார் மனசுல யாரு? ன்னு கூட கண்டுப்பிடிச்சுடுவேன்…

எப்படி?

நீங்க சுவத்தில மாட்டிருக்கிற வாட்சில நேருக்கு நேரா இருக்கிற இரண்டு நெம்பரை நினைச்சுக்குங்க…

ஒகே நினைச்சுட்டேன்…

பெரிய நெம்பரிலிருந்து சின்ன நெம்பரை கழிங்க…

கழிச்சுட்டேன்…

விடை 6 தானே!

வாவ்… எப்படி கண்டுப்பிடிச்சுங்க…

கடைசியா சொல்றேன்…

ஆச்சரியத்துடன்….நான் சானிடைசர் எடுத்து கைக்குப் பூசிக்கொண்டேன். அதில் கொஞ்சம் தான் சானிடைசர் இருந்தது.

இந்தாங்க…இனியவன்

நானே வைச்சிருக்கேன்..

Representational Image

பாக்கெட்டிலிருந்து சானிடைசர் எடுத்து அடித்துக்கொண்டார்.

அது பாட்டில் போலத் தெரியவில்லை…

அது என்ன வித்தியாசமா இருக்கே?

பேனா சானிடைசர்! பாக்கெட்டில் குத்திக்கலாம்!

எனக்கு ரோஜா பாக்கு சைசில் சின்ன சானிடைசர் பார்த்திருக்கேன். ஆனா, பேனா சைஸில சானிடைசர் இப்ப தான் பார்க்கிறேன்…. கிடைச்சா எனக்கும் ஒண்ணு வாங்கித்தாங்க…

இதெல்ல… இங்க் கொட்டிடுமுன்னு பயமில்லை…

என்ன அப்படி உத்து…உத்துப்பார்க்கிறீங்க…

விலையை தான்…கண்ணாடியை மறந்து வந்துட்டேன்!

சார்… சயிண்டிஸ்ட் ஐன்ஸ்டீன் மாதிரி மூணு கண்ணாடி வைச்சுக்க வேண்டியது தானே?

இரண்டு ஒகே…. அதென்னா மூணாவதா ஒண்ணு?

ஆமா படிக்கிறதுக்கு ஒண்ணும், தூரப் பார்வைக்கும் ஒண்ணும் வைச்சு இருப்பாராம்…

மூணாவது கண்ணாடி கோபம் வந்தா போட்டுக்குவாரா? என கிண்டல் செய்தேன்.

ஏன் சார்?

கோபம் கண்ணை மறைக்குமே? அது தான்

”ஹா! ஹா! ஹா!…” இனியவன் சிரித்தே விட்டார்.

இல்ல..இல்ல… அந்த இரண்டையும் தேடவாம்…

”ஹா…ஹா…ஹா”

சிரித்துக்கொண்டே,” எங்க வீட்டில மூணு நாளில சானிடைசர் பாட்டில் காலி செஞ்சுடறாங்க…” என என் கவலையைச் சொன்னேன்.

அந்தளவுக்கு யூஸ் பண்றாங்களாங்களா சார்?

இல்லை… நான் மூக்குக் கண்ணாடி துடைக்கவும், மொபைல் ஸ்கீரின் துடைக்கவும் அடிக்கடி எடுப்பேன்…

அப்புறம்…சொல்லுங்க!

வீட்டில திருமதி துணியில எதாவது கறைப்பட்டா, ஸ்டெயின் ரிமூவரா யூஸ் பண்றாங்க…

நீங்க வேற சார்… எங்க வீட்டில கொசு கடிச்ச எடத்தில இதை தடவுறாங்க…

இது புதுமாதிரியான ஐடியாவா இருக்கே…

சோப்புக்கும் சானிடைசருக்கும் அப்படி என்ன வித்தியாசம்?

சோப்பு கையிலிருக்கிற அழுக்கை மட்டும் தான் எடுக்கும், சானிடைசர் நுண்கிருமிகளை சாகடிக்கும்…

சானிடைசர் கையில் போட்ட உடனே அதிலிருக்கிற ஆல்கஹால் கை சூட்டில ஆவியாகி போயிடும்! அப்ப நுண்கிருமிகளும் செத்து போயிடும்!

ஆல்கஹால் இருக்கா? நாம குடிக்கலாமா?

ஓ… ஆனா நம்ம ஆவி போயிடும்! பரவாயில்லையா?

எனக்கு சிரிப்பு வந்தது.

மழை நின்றிருந்தது.

வழக்கமாக… போண்டா, பஜ்ஜி சாப்பிடும் கூட்டம் இல்லாமல் பேக்கரிகள் பூட்டப்பட்டு இருந்தன. வெறிச்சோடி கிடந்த ஒரு பேக்கரியின் பெயர் பலகையில் “SINCE 1990” என பெருமையாக எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டினேன்.

இனியவன் சிரித்துக்கொண்டே பக்கத்துக் கடையை பாருங்கன்னு சொன்னார்.

அது “NEW BAKERY” என இருந்தது. அதாவது ஸ்டாக் இல்லையாம்!

சரியான போட்டிதான்…போங்க! நீயுன்னு போட்டா, எப்ப படிச்சாலும் புதுசுன்னு தோணும் இனியவன்!

ஆமாங்க… உயர்தர சைவ ஹோட்டல் மாதிரி தான்… உள்ளே போனா தானே தெரியும்.

வாக்கிங் வரவங்க… இங்கே நின்னு பீட்ஸா,பர்கா ன்னு சாப்பிடுவாங்க…இனியவன்..

சார்…இதெல்லாம் உடம்புக்கு கெடுதலாச்சே!

போங்க இனியவன்… ஒரு வாய் சாப்பிட்ட உடனே நாக்கு ருசி கண்டுடுது… அப்புறம் வேண்டாமுன்னு சொல்ல மனசு வராது இல்ல…

சொல்லச் சொல்லவே…. சாப்பிட வேண்டும் போல தோன்றியது…

சார்…உங்க வயசுக்கு இதெல்லாம் தேவையில்லாதது…இதில அதிகமா டிரான்ஸ்ஃபேட் இருக்கு.. உள்ளே போனா நெஞ்செரிச்சல்,அல்சர், அப்புறம் மலசிக்கல்… வெயிட் அதிகமாகும்… நீங்க வாக்கிங் போயும் பிரயோஜனமில்லை…

இப்படியெல்லாம் பயமுறுத்தாதீங்க… நான் நொந்து நூடூல்ஸ் ஆயிடுவேன்…

இன்னொருக்கு நாளைக்கு நூடூல்ஸ் பத்தி சொல்றேன்…

Representational Image

ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்கணும்…

எதுக்குங்க சார்?க்

”நம்ம நடையை சும்மா அளக்க தான்! தினமும் எத்தனை தூரம் நடக்கிறோமுன்னு கணக்கு போட… ஆன்லைனில் பார்த்தேன். நல்ல வாட்ச் 3000 ரூபாய் போட்டிருக்கு…” எனச் சும்மா அளந்தேன்

எல்லாம் கொஞ்ச நாள் தான்… அப்புறம் சும்மா கிடக்கும்…போன வருஷம் சைக்கிளிங் போலாமுன்னு சைக்கிள் வாங்கினீங்க.. சைக்கிள் வீட்டில சும்மா தானே கிடக்கு….

இல்லை… கொரோனா முடிஞ்சதும் எடுத்து ஓட்டணும்…இனியவன்.

சார்… ஒரு நிமிஷத்தில் நடக்கிற அடிகளை 30 ஆல் வகுத்தால் வரும் விடை தான் நாம் ஒரு மணி நேரத்தில நடக்கிற தூரம்! உதாரணமா, நீங்க ஒரு நிமிஷத்தில 90 அடி எடுத்து வைத்தா 90/30= 3, உங்க நடைவேகம் ஒரு மணி நேரத்திற்கு 3 மைல்!

மைல் கணக்கு வேண்டாம்… கீமீ சொல்லுங்க…

மைலை 10 ஆல் பெருக்கி. வந்தததை அஞ்சால் வகுத்துக்க வேண்டியது தான்…

நாலு அடி நடந்த பின் அவரை மடக்க… ”அப்ப அடியை எப்படி கி.மீ க்கு மாத்துவீங்க… சுமாரா சொன்னா போதும்…

அடிசக்க…. அடியை 3 ஆல பெருக்கி 10 ஆல வகுத்து வற்ரது மீட்டர் கணக்கு…

இந்த மனக்கணக்கு எல்லாம் நமக்கு வராது சாமி…

”அப்ப…நீங்க விரல் விட்டு எண்ணக்கூடிய நண்பர்களில் ஒருவர் சார்!”

எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோசமாகவும் இருந்தது.

அந்தளவுக்கு நான் பெரிய ஆளா?

உங்களுக்கு தான் மணக்கணக்கு போடத்தெரியாதே? எனச் சொன்னதும் ஜெர்க் ஆகி, அவரை எப்படியாவது திருப்பி தாக்க வேண்டுமென ஆசை!

கணக்கா? கணிதமா? திருப்பிக் கேட்டேன்…

நான் தமிழ் இலக்கியம் படிச்சா கணக்கு தெரியாதா சார்?

கணக்கு? கணிதமா? அதைச்சொல்லுங்க…

”கணக்கு” ன்னா பெருக்கல், வகுத்தல்,கழித்தல்,கூட்டல் மட்டும்…

”கணிதம்” ன்னா அவற்றின் அடிப்படையில் எழும் எண், வடிவம்,வகை,தொகை போதுங்களா?

அதுசரி…எல்லாம் கண்டுப்பிடிக்கிறாங்க…. கொரோனா மீட்டர் கண்டுபிடிச்சா, நல்லா இருக்கும்…நிறைய பேரை காப்பாத்தியிருக்கலாம்.

கொரோனா மீட்டர் இல்ல… ஆனா, குரோனா மீட்டர் மீட்டர் இருக்கு…

அது என்ன?

கப்பல்களில் துல்லியமா நேரத்தைக் காட்டுவதற்கு செய்யப்பட்ட உறுதியான வாட்ச் தான்…

Representational Image

ஓ….பழைய காலத்தில டைம் பார்க்க என்ன செய்வாங்க?

நேரம் சொல்ல அறிவிப்பாளர்கள் இருந்து இருக்கிறாங்க…

அவங்களை நப்பூதனார் முல்லைப்பாட்டில் ”பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்” எனச்சொல்லி அந்த மனிதர்கள் முதலில் மன்னனைத் தொழுது, புகழ் கூறிப் பின்னர் வாழ்த்தி நேரம் சொல்வார்கள்.

அலைகடல் சூழ்ந்த உலகில் பகைவரை வெல்லச் செல்பவனே, உனது நாழிகை வட்டிலின்(குறுநீர்க் கன்னல்) கணக்குப்படி நேரம் இவ்வளவு என அறிவிப்பார்களாம்.

”பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்

தொழுது கான் கையர் தோன்ற வாழ்த்தி

எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய், நின்

குறுநீர்க் கன்னல் இனைத்து

( வரி: 55-58)

அதெல்லாம் இருக்கட்டும்… அந்த விடை எப்படி கண்டுப்பிடிச்சுங்க?

என் மனசுக்குள்ள 2-ம்,8-ம் நினைச்சேன், எப்படி கண்டுப்பிடிச்சுப்பாருன்னு தெரிஞ்சுக்கக் கேட்டேன்.

அதுவா சார்… எந்த பெரிய நெம்பரிலிருந்து சின்ன நெம்பரை கழிச்சாலும் ஆறு தான் விடை வரும்.

(வாக்கிங் தொடரும்)

சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.