பிலிப்பைன்ஸில், கொரோனா இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தவுள்ளதாக எச்சரிக்கை எழுந்துள்ளதையடுத்து, அந்நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மாட்டேன் என அடம் பிடிப்பவர்களை கைது செய்யப்போவதாக கூறி அச்சுறுத்தியுள்ளார் அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே. மேலும் அவர், “தடுப்பூசி வேண்டாமென்பவர்கள், இந்தியாவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ செல்லுங்கள். அமெரிக்காவுக்கு கூட சென்றுவிடுங்கள்” எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் நடந்த தொலைக்காட்சி வழியாக பொதுமக்களுடனான சந்திப்பில், இதை அவர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சி, கலந்துரையாடலாக அல்லாமல், பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியகா இருந்தது. இதில் பேசிய அந்நாட்டு அதிபர், ‘பிலிப்பைன்ஸில், நாடு முழுவதும் அவசர கால நிலை அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மும்மடங்காக அதிகரிக்கும் சூழலுக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்” எனக்கூறியுள்ளார்.

ஓரின சேர்க்கையாளராக இருந்து குணமடைந்தேன் - பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை  பேச்சு || Philippines president Rodrigo Duterte Claims to have cured  himself of Homosexuality

மேலும் அதில், “என்னை தவறாக நினைத்துக்கொள்ள வேண்டும். நாடு முழுவது கொரோனா மோசமாக பரவி வருகிறது. தேசிய அளவிலான, அவசர நிலை உள்ளது. சூழலை தடுக்க, தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். ஆகவே, தடுப்பூசி போடவில்லை என்றால், உங்களை நான் கைது செய்ய நேரும். கைது செய்து, உங்களுக்கு தடுப்பூசி போடுவோம். ஏற்கெனவே கொரோனா என்ற பேரிடரால் அவதியுற்று இருக்கும் எங்களுக்கு, தடுப்பூசி போடமாட்டேன் எனக்கூறுபவர்கள் மேலும் மேலும் சுமை கொடுக்கின்றீர்கள் என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.

இந்நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் பிலிப்பைன்ஸ் மக்கள் அனைவரும், என்னை ‘கைது செய்து – ஊசி போட்டுவிடும்’ நிலைக்கு தள்ளிவிடாதீர்கள் என கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு அதற்கு வலிமை உள்ளது. இருப்பினும் அந்த செய்கை, யாருக்கும் பிடிக்காதபடி இருக்குமென்பதால், நீங்களே முன்வந்துவிடுங்கள்.

Rodrigo Duterte: ஊரடங்கு உத்தரவை மீறினால் சுட்டுத்தள்ளுங்கள்: பிலிப்பைன்ஸ்  அதிபர் உத்தரவு - philippines president rodrigo duterte gives

நான் இவ்வளவு எடுத்துரைத்த பிறகும், உங்களுக்கு தடுப்பூசி வேண்டாமென்றால், அப்படியானவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள். இந்தியாவுக்கு செல்லுங்கள், அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் நாட்டுக்கு செல்ல வேண்டுமென்றாலும் செல்லுங்கள், அமெரிக்காவுக்கு கூட செல்லுங்கள். ஆனால்…. நீங்கள் இந்த நாட்டில் இருக்கும் வரை, நீங்கள் ஒரு மனிதர் என்றே நாங்கள் உங்களை பார்ப்போம். மனிதர்களுக்கு கொரோனா வரும். ஆகவே எந்தவொரு மனிதரையும் கொரோனாவுக்கு எதிரானவராக இந்த அரசு தயார்படுத்தும். அந்தக் கடமை எங்களை மட்டுமல்ல உங்களையும் உட்பட்டது” எனக் கடுமையாக கூறியுள்ளார் பிலிப்பைன்ஸ் அதிபர்.

இந்தியாவை, தடுப்பூசியிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் செல்லக்கூடிய நாடாக அவர் முன்மொழிந்திருப்பதும்; தடுப்பூசியை போட்டுக்கொள்ள விழிப்புணர்வுக்கு பதில் அதிகாரத்தன்மையை நிலைநாட்ட நினைப்பதும் உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.