இந்தியாவுடன் நடைபெற இருக்கும் உலக டெஸட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டது நியூசிலாந்து கிரிக்கெட் அணி.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை சவுத்தாம்டனில் நடைபெற இருக்கிறது. அண்மையில் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து வென்றது. இதனால் நியூசிலாந்து உற்சாகமாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறது. இந்தியாவும் இந்தப் போட்டியில் வெல்வதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கான 15 வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன், டாம் பிளண்டல், ட்ரெண்ட் போல்ட், டேவன் கான்வே, கிராண்ட்ஹோம், மாட் ஹென்ரி, ஜேமிசன், டாம் லேதம், ஹென்ரி நிக்கோல்ஸ், அஜாஸ் படேல், டிம் சவுத்தி, ராஸ் டெய்லர், நீல் வாக்னர், வாட்லிங், வில் யங்.